Skip to main content

ஸூரத்துல் அன்ஃபால் வசனம் ௭௫

وَالَّذِيْنَ اٰمَنُوْا مِنْۢ بَعْدُ وَهَاجَرُوْا وَجَاهَدُوْا مَعَكُمْ فَاُولٰۤىِٕكَ مِنْكُمْۗ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِيْ كِتٰبِ اللّٰهِ ۗاِنَّ اللّٰهَ بِكُلِّ شَيْءٍ عَلِيْمٌ ࣖ  ( الأنفال: ٧٥ )

And those who
وَٱلَّذِينَ
எவர்கள்
believed
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
from afterwards
مِنۢ بَعْدُ
பின்னர்
and emigrated
وَهَاجَرُوا۟
இன்னும் ஹிஜ்ரா சென்றனர்
and strove hard
وَجَٰهَدُوا۟
இன்னும் போர் புரிந்தனர்
with you
مَعَكُمْ
உங்களுடன்
then those
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
(are) of you
مِنكُمْۚ
உங்களைச் சேர்ந்தவர்கள்தான்
But those (of) blood relationship
وَأُو۟لُوا۟ ٱلْأَرْحَامِ
இரத்த பந்தங்கள்
some of them
بَعْضُهُمْ
அவர்களில் சிலர்
(are) nearer
أَوْلَىٰ
நெருக்கமானவர்
to another
بِبَعْضٍ
சிலருக்கு
in (the) Book
فِى كِتَٰبِ
வேதத்தில்
(of) Allah
ٱللَّهِۗ
அல்லாஹ்வின்
Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
of every thing
بِكُلِّ شَىْءٍ
எல்லாவற்றையும்
(is) All-Knower
عَلِيمٌۢ
நன்கறிந்தவன்

Wallazeena aamanoo mim ba'du wa haajaroo wa jaahadoo ma;akum faulaaa'ika minkum; wa ulul arhaami baduhum awlaa biba'din fee Kitaabil laah; innal laaha bikulli shai'in 'Aleem (al-ʾAnfāl 8:75)

Abdul Hameed Baqavi:

(இதன் பின்னரும் மக்காவாசிகளில்) எவர்கள் நம்பிக்கை கொண்டு (தங்கள்) ஊரை விட்டுப் புறப்பட்டு உங்களுடன் சேர்ந்து (எதிரியை எதிர்த்து) போர்புரிகின்றார்களோ அவர்களும் உங்களைச் சேர்ந்தவர்களே! இனி அல்லாஹ்வுடைய வேதக் கட்டளைப்படி உங்கள் உறவினர்களில் உள்ளவர்களே, ஒருவர் மற்றவருக்கு பொறுப்பு வகிப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

English Sahih:

And those who believed after [the initial emigration] and emigrated and fought with you – they are of you. But those of [blood] relationship are more entitled [to inheritance] in the decree of Allah. Indeed, Allah is Knowing of all things. ([8] Al-Anfal : 75)

1 Jan Trust Foundation

இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மார்க்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.