ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்திப் பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. அன்றி, அவர்களுக்கு (அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பொசுக்கியவாறு நெருப்பால்) பொசுக்கும் வேதனையுமுண்டு.
English Sahih:
Indeed, those who have tortured the believing men and believing women and then have not repented will have the punishment of Hell, and they will have the punishment of the Burning Fire. ([85] Al-Buruj : 10)
1 Jan Trust Foundation
நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், தவ்பா செய்யவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்தி, பிறகு (அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, வருந்தி, தங்கள் நிராகரிப்பை விட்டு) திருந்தவில்லையோ, அவர்களுக்கு ‘ஜஹன்னம்' என்ற நரகத்தின் வேதனை உண்டு. இன்னும், சுட்டெரிக்கக்கூடிய வேதனையும் அவர்களுக்கு உண்டு.