Skip to main content

ஸூரத்துத் தவ்பா வசனம் ௯௮

وَمِنَ الْاَعْرَابِ مَنْ يَّتَّخِذُ مَا يُنْفِقُ مَغْرَمًا وَّيَتَرَبَّصُ بِكُمُ الدَّوَاۤىِٕرَ ۗعَلَيْهِمْ دَاۤىِٕرَةُ السَّوْءِ ۗوَاللّٰهُ سَمِيْعٌ عَلِيْمٌ   ( التوبة: ٩٨ )

And among
وَمِنَ
இன்னும் இருந்து
the bedouins
ٱلْأَعْرَابِ
கிராம அரபிகள்
(is he) who
مَن
எவர்
takes
يَتَّخِذُ
எடுத்துக் கொள்வார்
what
مَا
எதை
he spends
يُنفِقُ
தர்மம் செய்கிறார்
(as) a loss
مَغْرَمًا
நஷ்டமாக
and he awaits
وَيَتَرَبَّصُ
இன்னும் எதிர்பார்க்கின்றனர்
for you
بِكُمُ
உங்களுக்கு
the turns (of misfortune)
ٱلدَّوَآئِرَۚ
சுழற்சிகளை
Upon them
عَلَيْهِمْ
அவர்கள் மீதுதான்
(will be) the turn
دَآئِرَةُ
சுழற்சி
(of) the evil
ٱلسَّوْءِۗ
வேதனையின்
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
(is) All-Hearer
سَمِيعٌ
நன்கு செவியுறுபவன்
All-Knower
عَلِيمٌ
நன்கறிபவன்

Wa minal A'raabi mai yattakhizu maa yunfiqu maghramanw wa yatarabbasu bikumud dawaaa'ir; alaihim daaa'iratus saw'; wallaahu Samee'un 'Aleem (at-Tawbah 9:98)

Abdul Hameed Baqavi:

(கல்வி ஞானமற்ற) கிராமத்து அரபிகளில் பலர் இருக்கின்றனர். அவர்கள் (தர்மத்திற்காகச்) செய்யும் செலவை நஷ்டம் என்று கருதி, நீங்கள் (காலச்) சக்கரத்தில் சிக்கி (கஷ்டத்திற்குள்ளாகி) விடுவதை எதிர்பார்க்கின்றனர். எனினும், அவர்கள் (தலை)மீதுதான் வேதனையின் சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அல்லாஹ் செவியுறுபவனும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

English Sahih:

And among the bedouins are some who consider what they spend as a loss and await for you turns of misfortune. Upon them will be a misfortune of evil. And Allah is Hearing and Knowing. ([9] At-Tawbah : 98)

1 Jan Trust Foundation

கிராமப்புறத்தவர்களில் சிலர் (தர்மத்திற்காகச்) செலவு செய்வதை நஷ்டமாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் (காலச் சுழலில் சிக்கித்) துன்பம் அடைய வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள் - ஆனால் அவர்கள் மீதுதான் கெட்டகாலம் சுழன்று கொண்டு இருக்கிறது - இன்னும், அல்லாஹ் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும்(யாவற்றையும்) நன்கு அறிபவனாகவும் இருக்கின்றான்.