அவர்களில் உங்கள் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. இதற்காகவே (மாறுபடும்) அவர்களை படைத்தும் இருக்கிறான். (பாவம் செய்த) "ஜின்களைக் கொண்டும் மனிதர்களைக் கொண்டும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்" என்ற உங்கள் இறைவனின் வாக்கு நிறைவேறியே தீரும்.
English Sahih:
Except whom your Lord has given mercy, and for that He created them. But the word of your Lord is to be fulfilled that, "I will surely fill Hell with jinn and men all together." ([11] Hud : 119)
1 Jan Trust Foundation
(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர; இதற்காகவே அவர்களைப் படைத்திருக்கிறான்; “நிச்சயமாக நான் ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக்கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகிவிடும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவர்களில்) உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் ஓரே மார்க்கத்தில் இருப்பார்கள்.) (ஒரே மார்க்கத்தில் இருந்து) இ(றை அருளை பெறுவ)தற்காகத்தான் அவன் அவர்களைப் படைத்தான். “ஜின்கள் இன்னும் மக்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்”என்ற உம் இறைவனின் வாக்கு நிறைவேறியது.