وَلَا يَنْفَعُكُمْ نُصْحِيْٓ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ يُرِيْدُ اَنْ يُّغْوِيَكُمْ ۗهُوَ رَبُّكُمْ ۗوَاِلَيْهِ تُرْجَعُوْنَۗ ( هود: ٣٤ )
Wa laa yanfa'ukum nusheee in arattu an ansaha lakum in kaanal laahu yureedu ai yughwi yakum; Huwa Rabbukum wa ilaihi turja'oon (Hūd 11:34)
Abdul Hameed Baqavi:
அன்றி "நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான் உங்களைப் படைத்து காப்பவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்.)
English Sahih:
And my advice will not benefit you – although I wished to advise you – if Allah should intend to put you in error. He is your Lord, and to Him you will be returned." ([11] Hud : 34)
1 Jan Trust Foundation
“நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்).