(யஃகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்" என்றும்,
English Sahih:
When they said, "Joseph and his brother are more beloved to our father than we, while we are a clan. Indeed, our father is in clear error. ([12] Yusuf : 8)
1 Jan Trust Foundation
(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்| “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்க, திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்கள் ஆவர். (இதில்) நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறில்தான் இருக்கிறார்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருவீராக.