உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதனை பகிரங்கமாகக் கூறினாலும் அவருக்கு (இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அவருக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.)
English Sahih:
It is the same [to Him] concerning you whether one conceals [his] speech or publicizes it and whether one is hidden by night or conspicuous [among others] by day. ([13] Ar-Ra'd : 10)
1 Jan Trust Foundation
எனவே, உங்களில் எவரும் தம் பேச்சை இரகசியமாக வைத்துக் கொண்டாலும், அல்லது, அதை வெளிப்படையாகக் கூறினாலும், (அவனுக்கு) சமமேயாகும்; இரவில் மறைந்திருப்பவனும், பகலில் பகிரங்கமாக நடப்பவனும் (எல்லோரும் அவனுக்குச் சமமே).
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
உங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும் அதை பகிரங்கப்படுத்தியவனும் இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்து பகலில் (நல்லவனாக) வெளிப்படுபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமே!