Skip to main content

ஸூரத்துர் ரஃது வசனம் ௧௩

وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهٖ وَالْمَلٰۤىِٕكَةُ مِنْ خِيْفَتِهٖۚ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيْبُ بِهَا مَنْ يَّشَاۤءُ وَهُمْ يُجَادِلُوْنَ فِى اللّٰهِ ۚوَهُوَ شَدِيْدُ الْمِحَالِۗ   ( الرعد: ١٣ )

And glorifies
وَيُسَبِّحُ
துதிக்கின்றனர்
the thunder
ٱلرَّعْدُ
இடி
[with] His praise
بِحَمْدِهِۦ
அவனைப் புகழ்ந்து
and the Angels
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
for fear of Him
مِنْ خِيفَتِهِۦ
அவனுடைய பயத்தால்
And He sends
وَيُرْسِلُ
அனுப்புகிறான்
the thunderbolts
ٱلصَّوَٰعِقَ
அபாயங்களை
and strikes
فَيُصِيبُ
வேறறுக்கிறான்
with it
بِهَا
அவற்றைக் கொண்டு
whom He wills
مَن يَشَآءُ
எவர்களை/நாடுகிறான்
yet they
وَهُمْ
அவர்களோ
dispute
يُجَٰدِلُونَ
தர்க்கிக்கிறார்கள்
about Allah
فِى ٱللَّهِ
அல்லாஹ்வை பற்றி
And He
وَهُوَ
அவன்
(is) Mighty (in) Strength
شَدِيدُ ٱلْمِحَالِ
கடுமையானவன்/பிடி

Wa yusabbihur ra'du bihamdihee walmalaaa'ikatu min kheefatihee wa yursilus sawaa'iqa fa yuseebu bihaa mai yashaaa'u wa hum yujaadiloona fil laahi wa Huwa shadeedul mihaal (ar-Raʿd 13:13)

Abdul Hameed Baqavi:

இடிகளும் மற்ற மலக்குகளும் அவனுக்குப் பயந்து அவனைத் துதி செய்து புகழ்கின்றனர். அவனே இடிகளை விழச் செய்து, அதைக்கொண்டு அவன் நாடியவர்களைத் தாக்குகிறான். (இவ்வாறெல்லாமிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி (உங்களிடம்) தர்க்கிக்கின்றனர். அவனோ (அவர்களைத் தண்டிக்கக் கருதினால் அவர்கள்) நழுவாது மிக்க பலமாகப் பிடித்துக் கொள்பவன்.

English Sahih:

And the thunder exalts [Allah] with praise of Him – and the angels [as well] from fear of Him – and He sends thunderbolts and strikes therewith whom He wills while they dispute about Allah; and He is severe in assault. ([13] Ar-Ra'd : 13)

1 Jan Trust Foundation

மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.