Skip to main content

ஸூரத்துர் ரஃது வசனம் ௧௬

قُلْ مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ قُلِ اللّٰهُ ۗقُلْ اَفَاتَّخَذْتُمْ مِّنْ دُوْنِهٖٓ اَوْلِيَاۤءَ لَا يَمْلِكُوْنَ لِاَنْفُسِهِمْ نَفْعًا وَّلَا ضَرًّاۗ قُلْ هَلْ يَسْتَوِى الْاَعْمٰى وَالْبَصِيْرُ ەۙ اَمْ هَلْ تَسْتَوِى الظُّلُمٰتُ وَالنُّوْرُ ەۚ اَمْ جَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ خَلَقُوْا كَخَلْقِهٖ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْۗ قُلِ اللّٰهُ خَالِقُ كُلِّ شَيْءٍ وَّهُوَ الْوَاحِدُ الْقَهَّارُ  ( الرعد: ١٦ )

Say
قُلْ
கூறுவீராக
"Who
مَن
யார்?
(is) the Lord
رَّبُّ
இறைவன்
(of) the heavens
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களின்
and the earth?"
وَٱلْأَرْضِ
இன்னும் பூமி
Say
قُلِ
கூறுவீராக
"Allah"
ٱللَّهُۚ
அல்லாஹ்
Say
قُلْ
கூறுவீராக
"Have you then taken
أَفَٱتَّخَذْتُم
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்?
from besides Him
مِّن دُونِهِۦٓ
அவனையன்றி
protectors
أَوْلِيَآءَ
பாதுகாவலர்களை
not they have power
لَا يَمْلِكُونَ
உரிமை பெறமாட்டார்கள்
for themselves
لِأَنفُسِهِمْ
தங்களுக்கே
(to) benefit
نَفْعًا
நன்மை செய்வதற்கு
and not (to) harm?"
وَلَا ضَرًّاۚ
தீங்கு செய்வதற்கு
Say
قُلْ
கூறுவீராக
"Is equal
هَلْ يَسْتَوِى
சமமாவார்களா?
the blind
ٱلْأَعْمَىٰ
குருடன்
and the seeing?
وَٱلْبَصِيرُ
இன்னும் பார்வையுடையவன்
Or
أَمْ
அல்லது
is equal
هَلْ تَسْتَوِى
சமமாகுமா?
the darkness[es] and the light?
ٱلظُّلُمَٰتُ وَٱلنُّورُۗ
இருள்கள்/இன்னும் ஒளி
Or
أَمْ
அல்லது?
they attribute
جَعَلُوا۟
ஆக்கினார்கள்
to Allah
لِلَّهِ
அல்லாஹ்விற்கு
partners
شُرَكَآءَ
இணைகளை
who created
خَلَقُوا۟
படைத்தார்கள்
like His creation
كَخَلْقِهِۦ
அவனுடைய படைப்பைப் போன்று
so that seemed alike
فَتَشَٰبَهَ
அதனால் குழப்பமடைந்தது
the creation
ٱلْخَلْقُ
படைப்பது
to them?"
عَلَيْهِمْۚ
இவர்கள் மீது
Say
قُلِ
கூறுவீராக
"Allah
ٱللَّهُ
அல்லாஹ்தான்
(is) the Creator
خَٰلِقُ
படைப்பாளன்
of all things
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
and He (is) the One
وَهُوَ ٱلْوَٰحِدُ
அவன்/ஒருவன்
the Irresistible"
ٱلْقَهَّٰرُ
அடக்கி ஆளுபவன்

Wul mar Rabbus samaawaati wal ard; qulillaah; qul afattakhaztum min dooniheee awliyaaa'a laa yamlikoona li anfusihim naf'anw wa laa darraa; qul hal yastawil a'maa wal baseeru am hal tastawiz zulumaatu wannoor; am ja'aloo lillaahi shurakaaa'a khalaqoo kakhalqihee fatashaa bahal khalqu 'alaihim; qulil laahu Khaaliqu kulli shai'inw wa Huwal Waahidul Qahhar (ar-Raʿd 13:16)

Abdul Hameed Baqavi:

(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களையும், பூமியையும் படைத்து நிர்வகிப்பவன் யார்?" என்று நீங்கள் கேளுங்கள். (இதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன!) நீங்களே (அவர்களை நோக்கி) "அல்லாஹ்தான்" என்று கூறுங்கள். அவ்வாறிருக்க "அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கின்றீர்களா? அவை தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்ய சக்தியற்றவைகளாய் இருக்கின்றன" என்றும் கூறுங்கள். (பின்னும் அவர்களை நோக்கி) "குருடனும், பார்வை உடையவரும் சமமாவாரா? அல்லது இருளும் பிரகாசமும் சமமாகுமா?" என்று கேளுங்கள். அல்லது "அவர்கள் (இறைவனுக்கு) இணையாக்கிக் கொண்டிருக்கும் தெய்வங்கள் அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதனையும் படைத்திருக் கின்றனவா?" (என்றும் கேளுங்கள்.) அவ்வாறாயின் (இந்த உலகைப்) படைத்தவன் (யாரென்பதில்) அவர்களுக்குள் சந்தேகமே ஏற்பட்டிருக்கலாம். (அவ்வாறும் இல்லையே! ஆகவே, அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: (இவ்வுலகிலுள்ள) ஒவ்வொன்றையும் படைப்பவன் அல்லாஹ்தான். அவன் ஒருவனே! (அவனுக்கு இணை துணையில்லை.) அவனே (உலகிலுள்ள அனைத்தையும்) அடக்கி ஆளுகின்றான்.

English Sahih:

Say, "Who is Lord of the heavens and earth?" Say, "Allah." Say, "Have you then taken besides Him allies not possessing [even] for themselves any benefit or any harm?" Say, "Is the blind equivalent to the seeing? Or is darkness equivalent to light? Or have they attributed to Allah partners who created like His creation so that the creation [of each] seemed similar to them?" Say, "Allah is the Creator of all things, and He is the One, the Prevailing." ([13] Ar-Ra'd : 16)

1 Jan Trust Foundation

(நபியே! அவர்களிடம்;) “வானங்களுக்கும் பூமிக்கும் இறைவன் யார்?” என்று நீர் கேளும். அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும்| “(அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர்”; மேலும், கூறும்| “குருடனும் பார்வை உடையவனும் சமமாவார்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத்திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்!” (அவ்வாறில்லையே எனவே நபியே! நீர் உறுதியாகக்) கூறும்| “அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கிறவன்; அவன் ஒருவனே; (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன்” என்று.