اَفَمَنْ هُوَ قَاۤىِٕمٌ عَلٰى كُلِّ نَفْسٍۢ بِمَا كَسَبَتْۚ وَجَعَلُوْا لِلّٰهِ شُرَكَاۤءَ ۗ قُلْ سَمُّوْهُمْۗ اَمْ تُنَبِّـُٔوْنَهٗ بِمَا لَا يَعْلَمُ فِى الْاَرْضِ اَمْ بِظَاهِرٍ مِّنَ الْقَوْلِ ۗبَلْ زُيِّنَ لِلَّذِيْنَ كَفَرُوْا مَكْرُهُمْ وَصُدُّوْا عَنِ السَّبِيْلِ ۗوَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ ( الرعد: ٣٣ )
Afaman Huwa qaaa'imun 'alaa kulli nafsim bimaa kasabat; wa ja'aloo illlaahi shurakaaa'a qul samoohum; am tunabbi'oona hoo bimaa laa ya'lamu fil ardi; am bizaahirim minal qawl; bal zuyyina lillazeena kafaroo makruhum wa suddoo 'anis sabeel; wa mai yudlilil laaahu famaa lahoo min haad; (ar-Raʿd 13:33)
Abdul Hameed Baqavi:
அவனோ, ஒவ்வொரு ஆத்மாவும் செய்யும் ஒவ்வொன் றையும் நன்கறிந்தவன். அவர்களோ (பொய்யான தெய்வங்களை) அல்லாஹ்வுக்கு இணையாக்குகின்றனர்! (இத்தகைய குற்றவாளி களைத் தண்டிக்காது விட்டுவிடுவானா? நபியே! நீங்கள் அவர்களை நோக்கி, "நீங்கள் கூறும் தெய்வங்கள் மெய்யாகவே அவனுக்கு இணையானவையாக இருந்தால்,) அவற்றின் பெயரை நீங்கள் கூறுங்கள் அல்லது பூமியில் (அவனுக்கு இணையான ஒன்றிருந்து அதனை) அவன் அறியாது போய் அதைப்பற்றி அவனுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது, உண்மையில்லாத) வெறும் வார்த்தைகள் தாமா?" என்று கேளுங்கள். இவைகளில் ஒன்றுமில்லை! இந்நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகளே அழகாகக் காண்பிக்கப் பெற்றுவிட்டன. (ஆதலால்தான் அவர்கள்) நேரான வழியிலிருந்தும் தடுக்கப்பட்டுவிட்டனர். எவர்களை (அவர்களுடைய பாவங்களின் காரணமாக) அல்லாஹ் தவறான வழியில் விட்டுவிட்டானோ அவர்களை நேரான வழியில் செலுத்தக்கூடியவர் ஒருவருமில்லை.
English Sahih:
Then is He who is a maintainer of every soul, [knowing] what it has earned, [like any other]? But to Allah they have attributed partners. Say, "Name them. Or do you inform Him of that which He knows not upon the earth or of what is apparent [i.e., alleged] of speech?" Rather, their [own] plan has been made attractive to those who disbelieve, and they have been averted from the way. And whomever Allah sends astray – there will be for him no guide. ([13] Ar-Ra'd : 33)
1 Jan Trust Foundation
ஒவ்வோர் ஆத்மா சம்பாதிக்கும் ஒவ்வொன்றையும் கண்காணிப்பவன் அவனல்லவா? அப்படியிருந்தும்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்துகின்றார்கள். (நபியே!) நீர் கூறும்| “அவர்களின் பெயர்களைக் கூறுங்கள்; அல்லது பூமியிலுள்ள அவன் அறியாதவற்றை நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அல்லது (நீங்கள் கூறுவது) வெறும் வார்த்தைகள் தானா?” என்று. அப்படியல்ல! நிராகரிப்பவர்களுக்கு அவர்களுடைய சூழ்ச்சிகள் அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளன; நேர்வழியிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டும் விட்டனர். எவரை அல்லாஹ் வழிகெடுக்கிறானோ அவரை நேர் வழியில் செலுத்துபவர் எவருமில்லை.