மறுமை நாளில் தங்கள் பாவச்சுமையை இவர்கள் சுமப்பதுடன், அறிவின்றி இவர்கள் வழிகெடுத்த மற்றவர்களின் பாவச்சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இவ்வாறு இருவரின் பாவச்சுமையை) இவர்களே சுமப்பது மிகக் கெட்டதல்லவா?
English Sahih:
That they may bear their own burdens [i.e., sins] in full on the Day of Resurrection and some of the burdens of those whom they misguide without [i.e., by lack of] knowledge. Unquestionably, evil is that which they bear. ([16] An-Nahl : 25)
1 Jan Trust Foundation
கியாம நாளில் அவர்கள், தங்கள் (பாவச்) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும்; மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழி கெடுத்தார்களோ, அவர்களுடைய (பாவச்) சுமைகளையும் (சுமக்கட்டும்); இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா?.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இதன் காரணமாக, மறுமை நாளில் தங்கள் (பாவச்)சுமைகளை முழுமை யாக (இவர்கள்) சுமப்பார்கள். இன்னும் இவர்கள் எவர்களை கல்வியின்றி வழிகெடுத்தார்களே அவர்களின் (பாவச்)சுமைகளிலிருந்தும் (இவர்கள்) சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள் இவர்கள் சுமப்பது மிகக் கெட்டது.