Skip to main content

ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௭௦

وَاللّٰهُ خَلَقَكُمْ ثُمَّ يَتَوَفّٰىكُمْ وَمِنْكُمْ مَّنْ يُّرَدُّ اِلٰٓى اَرْذَلِ الْعُمُرِ لِكَيْ لَا يَعْلَمَ بَعْدَ عِلْمٍ شَيْـًٔاۗ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ قَدِيْرٌ ࣖ   ( النحل: ٧٠ )

And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
created you
خَلَقَكُمْ
உங்களைப் படைத்தான்
then will cause you to die
ثُمَّ يَتَوَفَّىٰكُمْۚ
பிறகு/உயிர் கைப்பற்றுகிறான்/உங்களை
And among you
وَمِنكُم
இன்னும் உங்களில்
(is one) who
مَّن
எவர்
is sent back
يُرَدُّ
திருப்பப்படுபவர்
to the worst
إِلَىٰٓ أَرْذَلِ
வரை/அற்பமானது
(of) the age
ٱلْعُمُرِ
வயது
so that
لِكَىْ
ஆவதற்காக
not he will know
لَا يَعْلَمَ
அறியமாட்டான்
after
بَعْدَ
பின்பு
knowledge a thing
عِلْمٍ شَيْـًٔاۚ
அறிதல்/ஒன்றை
Indeed Allah
إِنَّ ٱللَّهَ
நிச்சயமாக அல்லாஹ்
(is) All-Knowing
عَلِيمٌ
நன்கறிந்தவன்
All-Powerful
قَدِيرٌ
பேராற்றலுடையவன்

Wallaahu khalaqakum suma tatawaffaakum; wa minkum many-yuradu ilaaa arzalil 'umuri likai laa ya'lama ba'da 'ilmin shai'aa; innal laaha 'Aleemun Qadeer (an-Naḥl 16:70)

Abdul Hameed Baqavi:

உங்களைப் படைத்தவன் அல்லாஹ்தான். பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான். கற்றறிந்திருந்தும் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய பலவீனம் தரும் முதுமை வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. (உங்களில் யார், யாரை எவ்வளவு காலம் விட்டுவைக்க வேண்டுமென்பதை) நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனும் (அவ்வாறு செய்ய) மிக்க ஆற்றலுடையவனாகவும் இருக்கிறான்.

English Sahih:

And Allah created you; then He will take you in death. And among you is he who is reversed to the most decrepit [old] age so that he will not know, after [having had] knowledge, a thing. Indeed, Allah is Knowing and Competent. ([16] An-Nahl : 70)

1 Jan Trust Foundation

இன்னும்; உங்களைப்படைத்தவன் அல்லாஹ் தான், பின்னர் அவனே உங்களை மரணிக்கச் செய்கிறான்; கல்வியறிவு பெற்றிருந்தும் (பின்) எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாகவும், பேராற்றல் உடையவனாகவும் இருக்கின்றான்.