(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது.
English Sahih:
Say, "If mankind and the jinn gathered in order to produce the like of this Quran, they could not produce the like of it, even if they were to each other assistants." ([17] Al-Isra : 88)
1 Jan Trust Foundation
“இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது” என்று (நபியே) நீர் கூறும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! மனிதர்களும் ஜின்களும் இந்த குர்ஆன் போன்றதைக் கொண்டு வர ஒன்று சேர்ந்தாலும் இது போன்றதை அவர்கள் கொண்டு வர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே.