Skip to main content

ஸூரத்துல் கஹ்ஃபு வசனம் ௨௧

وَكَذٰلِكَ اَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوْٓا اَنَّ وَعْدَ اللّٰهِ حَقٌّ وَّاَنَّ السَّاعَةَ لَا رَيْبَ فِيْهَاۚ اِذْ يَتَنَازَعُوْنَ بَيْنَهُمْ اَمْرَهُمْ فَقَالُوا ابْنُوْا عَلَيْهِمْ بُنْيَانًاۗ رَبُّهُمْ اَعْلَمُ بِهِمْۗ قَالَ الَّذِيْنَ غَلَبُوْا عَلٰٓى اَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِمْ مَّسْجِدًا  ( الكهف: ٢١ )

And similarly
وَكَذَٰلِكَ
அவ்வாறே
We made known
أَعْثَرْنَا
காண்பித்தோம்
about them
عَلَيْهِمْ
அவர்களை
that they might know
لِيَعْلَمُوٓا۟
அவர்கள் அறிவதற்காக
that
أَنَّ
நிச்சயம்
(the) Promise
وَعْدَ
வாக்கு
(of) Allah
ٱللَّهِ
அல்லாஹ்வின்
(is) true
حَقٌّ
உண்மை
and that
وَأَنَّ
இன்னும் நிச்சயம்
(about) the Hour
ٱلسَّاعَةَ
மறுமை
(there is) no doubt
لَا رَيْبَ
அறவே சந்தேகம் இல்லை
in it
فِيهَآ
அதில்
When they disputed
إِذْ يَتَنَٰزَعُونَ
போது/தர்க்கிப்பார்கள்
among themselves
بَيْنَهُمْ
தங்களுக்கிடையில்
about their affair
أَمْرَهُمْۖ
தங்கள் விஷயத்தில்
and they said
فَقَالُوا۟
கூறினர்
"Construct
ٱبْنُوا۟
எழுப்புங்கள், கட்டுங்கள்
over them
عَلَيْهِم
அவர்களுக்கருகில்
a structure
بُنْيَٰنًاۖ
ஒரு கட்டடத்தை
Their Lord
رَّبُّهُمْ
அவர்களின் இறைவன்
knows best
أَعْلَمُ
மிக அறிந்தவன்
about them"
بِهِمْۚ
அவர்களை
Said
قَالَ
கூறினார்(கள்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
prevailed
غَلَبُوا۟
மிகைத்தனர்
in their matter
عَلَىٰٓ أَمْرِهِمْ
அவர்களின் விஷயத்தில்
"Surely we will take
لَنَتَّخِذَنَّ
நிச்சயம்ஆக்குவோம்
over them
عَلَيْهِم
அவர்களுக்கருகில்
a place of worship"
مَّسْجِدًا
ஒரு தொழுமிடத்தை

Wa kazaalika a'sarnaa 'alaihim liya'lamooo anna wa'dal laahi haqqunw wa annas Saa'ata laa raiba feehaa iz yatanaaza'oona bainahum amrahum faqaalub noo 'alaihim bunyaanaa; Rabbuhum a'lamu bihim; qaalal lazeena ghalaboo 'alaaa amrihim lanat takhizanna 'alaihim masjidaa (al-Kahf 18:21)

Abdul Hameed Baqavi:

(மரணித்தவர்களை உயிர்ப்பிப்பவனாகிய) அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்றும், மறுமை வருவதில் யாதொரு சந்தேகமுமில்லை என்றும், (இதன் மூலம் அப்பட்டினவாசிகளான) அவர்கள் உறுதியாக அறிந்து கொள்ளும் பொருட்டு இவ்வாறு (உணவு தேடி அங்கு செல்லும்படி செய்து) அவர்களுக்கு (இவர்களைக்) காட்டிக் கொடுத்தோம். (அந்நகரவாசிகள் இவர்கள் இருந்த குகைக்கு வந்து) "இவர்கள் யார் என்பதைப் பற்றித் (தங்களுக்குள்) தர்க்கித்துக் கொண்டு, இவர்களை இறைவன்தான் நன்கறிவான் என்றும், இவர்கள் இருக்கும் இடத்தில் (உயர்ந்த) ஒரு கோபுரத்தை (ஞாபகார்த்தமாக) எழுப்புங்கள்" என்றும் கூறினார்கள். (இந்தத் தர்க்கத்தில்) எவர்களுடைய அபிப்பிராயம் மேலோங்கியதோ அவர்கள் "இவர்கள் இருக்கும் இடத்தில் ஒரு பள்ளியை நிச்சயமாக நாம் அமைத்து விடுவோம்" என்றார்கள்.

English Sahih:

And similarly, We caused them to be found that they [who found them] would know that the promise of Allah is truth and that of the Hour there is no doubt. [That was] when they disputed among themselves about their affair and [then] said, "Construct over them a structure. Their Lord is most knowing about them." Said those who prevailed in the matter, "We will surely take [for ourselves] over them a masjid." ([18] Al-Kahf : 21)

1 Jan Trust Foundation

இன்னும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்றும், நிச்சயமாக கியாம நாளிலும் சந்தேகமில்லை என்றும் அப்பட்டணவாசிகள் அறிந்து கொள்வதற்காகவே, இவ்வாறு அவர்களைப் பற்றிய (விஷயத்)தை வெளியாக்கினோம்; (அப்பட்டணவாசிகளோ) “இவர்கள் யார் என்பதை பற்றி தர்க்கித்துக் கொண்டதை (நபியே! நினைவு கூறும்) “இவர்கள் (இருந்த இடத்தின்) மீது ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள்; இவர்களை(ப் பற்றி) இறைவனே நன்கறிவான் என்றனர்; இ(வ்விவாதத்)தில் எவர்களுடைய கருத்து மிகைத்ததோ அவர்கள்| “நிச்சயமாக அவர்கள் மீது ஒரு மஸ்ஜிதை அமைப்போம்” என்று கூறினார்கள்.