Skip to main content

ஸூரத்துல் பகரா வசனம் ௧௬௭

وَقَالَ الَّذِيْنَ اتَّبَعُوْا لَوْ اَنَّ لَنَا كَرَّةً فَنَتَبَرَّاَ مِنْهُمْ ۗ كَمَا تَبَرَّءُوْا مِنَّا ۗ كَذٰلِكَ يُرِيْهِمُ اللّٰهُ اَعْمَالَهُمْ حَسَرٰتٍ عَلَيْهِمْ ۗ وَمَا هُمْ بِخَارِجِيْنَ مِنَ النَّارِ ࣖ  ( البقرة: ١٦٧ )

And said
وَقَالَ
இன்னும் கூறுவார்(கள்)
those who
ٱلَّذِينَ
எவர்கள்
followed
ٱتَّبَعُوا۟
பின்பற்றினார்கள்
"(Only) if [that] for us
لَوْ أَنَّ لَنَا
நிச்சயமாக நமக்கு முடிந்தால்
a return
كَرَّةً
திரும்பச்செல்வது
then we will disown
فَنَتَبَرَّأَ
விலகிக் கொள்வோம்
[from] them
مِنْهُمْ
அவர்களை விட்டு
as
كَمَا
போல
they disown
تَبَرَّءُوا۟
விலகிக்கொண்டார்கள்
[from] us"
مِنَّاۗ
எங்களைவிட்டு
Thus
كَذَٰلِكَ
இவ்வாறே
will show them
يُرِيهِمُ
காண்பிப்பான்/ அவர்களுக்கு
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
their deeds
أَعْمَٰلَهُمْ
அவர்களின் செயல்களை
(as) regrets
حَسَرَٰتٍ
மனவேதனைகளாக
for them
عَلَيْهِمْۖ
அவர்களுக்கு
And not
وَمَا
இன்னும் இல்லை
they
هُم
அவர்கள்
will come out
بِخَٰرِجِينَ
வெளியேறுபவர்களாக
from the Fire
مِنَ ٱلنَّارِ
நெருப்பிலிருந்து

Wa qaalal lazeenat taba'oo law anna lanaa karratan fanatabarra a minhum kamaa tabarra'oo minnaa; kazaalika yureehimullaahu a'maalahum hasaraatin 'alaihim wa maa hum bikhaarijeena minan Naar (al-Baq̈arah 2:167)

Abdul Hameed Baqavi:

தவிர, (அவர்களைப்) பின்பற்றிய இவர்கள் மற்றொருமுறை நாம் (உலகத்துக்கு) திரும்ப செல்லக் கூடுமாயின் (எங்களுக்கு வழிகாட்டிய) அவர்கள், (இப்பொழுது முற்றிலும்) எங்களைக் கைவிட்டு விலகிக் கொண்டபடியே நாங்களும் அவர்களை விட்டு நிச்சயமாக விலகிக்கொள்வோம் என்று கூறுவார்கள். (அவர்களுடைய உடல்கள் நரகில் வேதனைப்படும்.) இவ்வாறே (அவர்களுடைய உள்ளங்களும் வேதனையடைவதற்காக) அவர்களுடைய (தீய) செயல்களை அல்லாஹ் அவர்களுக்கு கைசேதமாக எடுத்துக் காண்பிப்பான். மேலும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து மீளவே மாட்டார்கள்.

English Sahih:

Those who followed will say, "If only we had another turn [at worldly life] so we could disassociate ourselves from them as they have disassociated themselves from us." Thus will Allah show them their deeds as regrets upon them. And they are never to emerge from the Fire. ([2] Al-Baqarah : 167)

1 Jan Trust Foundation

(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்| “நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.” இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான்; அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.