(இறைவனுக்கு கட்டுப்படுபவர்கள், இறைவனுக்கு மாறு செய்பவர்கள் ஆகிய) இவ்விரு வகுப்பாரும் தங்கள் இறைவனைப் பற்றித் தர்க்கித்துக் கொண்டிருக்கின்றனர். ஆகவே, அவர்களில் எவர்கள் (உண்மையான இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பினால் ஆன ஆடை தயார் செய்யப் பட்டிருக்கிறது. (அக்கினியைப் போல்) கொதித்துக் கொண்டிருக்கும் தண்ணீர் அவர்களுடைய தலைகளின் மீது ஊற்றப்படும்.
English Sahih:
These are two adversaries who have disputed over their Lord. But those who disbelieved will have cut out for them garments of fire. Poured upon their heads will be scalding water ([22] Al-Hajj : 19)
1 Jan Trust Foundation
(முஃமின்களும், முஃமின்களல்லாதவருமான) இரு தரப்பாரும் தம் இறைவனைப் பற்றித் தர்க்கிக்கின்றனர்; ஆனால் எவர் (இறைவனை) நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு நெருப்பிலிருந்து ஆடைகள் தயாரிக்கப்படும்; கொதிக்கும் நீர் அவர்கள் தலைகளின் மேல் ஊற்றப்படும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்விருவரும் (-அல்லாஹ்வின் நம்பிக்கை கொண்டவரும், அவனை நிராகரித்தவரும்) தங்கள் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கிக்கின்றனர். ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பில் (பழுக்க சூடுகாட்டப்பட்ட செம்பிலிருந்து) ஆடைகள் வெட்டப்படும். அவர்களின் தலைகளுக்கு மேலிருந்து நன்கு கொதிக்கின்ற சுடு நீர் ஊற்றப்படும்.