(நபியே!) அவர்கள் வேதனையைத் தேடி உங்களிடம் அவசரப்படுகின்றனர். (நீங்கள் கூறுங்கள்: உங்கள் மீது வேதனை இறக்குவதாக) அல்லாஹ் செய்த வாக்குறுதியை அவன் மாற்ற மாட்டான். நிச்சயமாக உங்களது இறைவனிடத்தில் ஒரு நாள் நீங்கள் எண்ணும் (உங்களுடைய) ஆயிரம் வருடங்களுக்குச் சமமாகும்.
English Sahih:
And they urge you to hasten the punishment. But Allah will never fail in His promise. And indeed, a day with your Lord is like a thousand years of those which you count. ([22] Al-Hajj : 47)
1 Jan Trust Foundation
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அவர்கள் உம்மிடம் வேதனையை அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை அறவே மாற்ற மாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் எண்ணக்கூடியவற்றிலிருந்து (உங்கள் நாட்களிலிருந்து) ஆயிரம் ஆண்டுகளைப் போன்றதாகும்.