அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) திருப்பிவிடும் பொருட்டு தன் கழுத்தை திருப்பியவர்களாக (கர்வம் கொண்டு இவ்வாறு தர்க்கிக்கின்றனர்.) இம்மையில் அவர்களுக்கு இழிவுதான். மறுமை நாளிலோ நெருப்பின் வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம்.
English Sahih:
Twisting his neck [in arrogance] to mislead [people] from the way of Allah. For him in the world is disgrace, and We will make him taste on the Day of Resurrection the punishment of the Burning Fire [while it is said], ([22] Al-Hajj : 9)
1 Jan Trust Foundation
(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது; கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தனது கழுத்தைத் திருப்பியவனாக (-பெருமையடித்து புறக்கணித்தவனாக) அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து (நம்பிக்கையாளர்களை) தடுப்பதற்காக (அவன் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கிக்கின்றான். அவனுக்கு இவ்வுலகத்தில் கேவலம் (-தண்டனை) உண்டு. மறுமை நாளில் பொசுக்கக்கூடிய வேதனையை நாம் அவனுக்கு சுவைக்க வைப்போம். (அவனை நெருப்பால் பொசுக்குவோம்.)