எவர்கள் தங்கள் மனைவிகள் மீது (விபச்சாரத்தைக் கொண்டு) குற்றம்கூறித் தங்களையன்றி அவர்களிடம் (நான்கு) சாட்சிகள் இல்லாமல் இருந்தால் அதற்காக அச்சமயம் நிச்சயமாக தான் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி,
English Sahih:
And those who accuse their wives [of adultery] and have no witnesses except themselves – then the witness of one of them [shall be] four testimonies [swearing] by Allah that indeed, he is of the truthful. ([24] An-Nur : 6)
1 Jan Trust Foundation
எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி|
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர்கள் தங்களது மனைவிகளை (விபசாரிகள் என்று) ஏசுகிறார்களோ அவர்களிடம் அவர்களைத் தவிர சாட்சிகள் (வேறு) இல்லையோ, அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக தான் உண்மை கூறுபவர்களில் (ஒருவன்)தான்”என்று நான்கு முறை சாட்சிகள் சொல்ல வேண்டும்.