(நபியே!) எவர்கள் (உங்களை) நிராகரிக்கிறார்களோ அவர்கள் "இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் இறக்கப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (இதனை) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி (வரிசை முறைப்படி) ஒழுங்கு படுத்துவதெல்லாம் உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே!
English Sahih:
And those who disbelieve say, "Why was the Quran not revealed to him all at once?" Thus [it is] that We may strengthen thereby your heart. And We have spaced it distinctly. ([25] Al-Furqan : 32)
1 Jan Trust Foundation
இன்னும்| “இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை?” என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிராகரிப்பாளர்கள் கூறினர்: இந்த குர்ஆன் இவர் (-இந்த தூதர்) மீது ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாக இறக்கப்பட வேண்டாமா! இவ்வாறுதான் (நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்) ஏனெனில், அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக. இன்னும் இதை சிறிது சிறிதாக (உமக்கு ஓதி)கற்பித்(து விவரித்)தோம்.