Illaa man taaba wa 'aamana wa 'amila 'amalan saalihan fa ulaaa'ika yubad dilul laahu saiyi aatihim hasanaat; wa kaanal laahu Ghafoorar Raheemaa (al-Furq̈ān 25:70)
ஆயினும், (அவர்களில்) எவர்கள் பாவத்திலிருந்து விலகி (மன்னிப்பு கோரி) நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ, அத்தகையவர்கள் (முன்னர் செய்துவிட்ட) பாவங்களை அல்லாஹ் (மன்னிப்பது மட்டுமல்ல; அதனை) நன்மையாகவும் மாற்றி விடுகிறான். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
English Sahih:
Except for those who repent, believe and do righteous work. For them Allah will replace their evil deeds with good. And ever is Allah Forgiving and Merciful. ([25] Al-Furqan : 70)
1 Jan Trust Foundation
ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனினும், யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்கள், அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். (இஸ்லாமில் நுழைவதற்கு முன்பு அவர்கள் செய்த தீமையான காரியங்களுக்குப் பதிலாக நன்மைகளை அவன் அவர்களுக்கு மாற்றி விடுகிறான். முன்னர் பாவத்தில் செலவு செய்தனர். இப்போது நன்மையில் செலவு செய்வார்கள். முன்பு இணைவைத்தனர். இப்போது ஏக இறைவனை மட்டும் வணங்குகின்றனர். முன்னர் இஸ்லாமிற்கு எதிராக சண்டையிட்டனர். இப்போது இஸ்லாமிற்காக சண்டையிடுகின்றனர்.) அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்.