இறுதிநாள் அவர்களை நெருங்கிய சமயத்தில், அவர்களுக்காகப் பூமியிலிருந்து ஒரு கால்நடையை நாம் வெளிப் படுத்துவோம். அது எந்தெந்த மனிதர்கள் நம்முடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
English Sahih:
And when the word [i.e., decree] befalls them, We will bring forth for them a creature from the earth speaking to them, [saying] that the people were, of Our verses, not certain [in faith]. ([27] An-Naml : 82)
1 Jan Trust Foundation
அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்கள் மீது நமது வாக்கு (அவர்கள் இனி நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற நமது வாக்கு உறுதியாக) நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளைக் கொண்டு உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்”என்று அவர்களிடம் அது பேசும்.