Man jaaa'a bilhasanati falahoo khairum minhaa wa man jaaa'a bissaiyi'ati falaa yujzal lazeena 'amilus saiyiaati illaa maa kaanoo ya'maloon (al-Q̈aṣaṣ 28:84)
Abdul Hameed Baqavi:
(உங்களில்) எவரேனும் யாதொரு நன்மையை(ச் செய்து) கொண்டு வந்தால், அவருக்கு அதைவிட மேலான கூலியே கிடைக்கும். உங்களில் எவரேனும் யாதொரு பாவத்தைக் கொண்டு வந்தாலோ, அவர் செய்த பாவங்களின் அளவேயன்றி (அதிகமாகத்) தண்டிக்கப்பட மாட்டார்.
English Sahih:
Whoever comes [on the Day of Judgement] with a good deed will have better than it; and whoever comes with an evil deed – then those who did evil deeds will not be recompensed except [as much as] what they used to do. ([28] Al-Qasas : 84)
1 Jan Trust Foundation
எவரேனும் நன்மையைக் கொண்டு வந்தால் அவருக்கு அதைவிட மேலானது உண்டு; எவன் தீமையை செய்கிறானோ தீமை செய்வோர் அவர்கள் செய்ததற்குச் சமமான கூலியைப் பெறுவார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர் நன்மையை (-லா இலாஹ இல்லல்லாஹ்வை)க் கொண்டு வருவாரோ அவருக்கு அதனால் நற்கூலி கிடைக்கும். எவர்கள் தீமையைக் கொண்டு வருவார்களோ, தீமைகளைச் செய்தவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார்கள்.