Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௦௬

يَّوْمَ تَبْيَضُّ وُجُوْهٌ وَّتَسْوَدُّ وُجُوْهٌ ۚ فَاَمَّا الَّذِيْنَ اسْوَدَّتْ وُجُوْهُهُمْۗ اَ كَفَرْتُمْ بَعْدَ اِيْمَانِكُمْ فَذُوْقُوا الْعَذَابَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ  ( آل عمران: ١٠٦ )

(On the) Day
يَوْمَ
நாள்
would become white
تَبْيَضُّ
வெண்மையாகும்
(some) faces
وُجُوهٌ
(சில) முகங்கள்
and would become black
وَتَسْوَدُّ
இன்னும் கறுக்கும்
(some) faces
وُجُوهٌۚ
(சில) முகங்கள்
As for
فَأَمَّا
ஆக
those whose
ٱلَّذِينَ
எவர்கள்
turn black
ٱسْوَدَّتْ
கறுத்தன
[their] faces
وُجُوهُهُمْ
அவர்களுடைய முகங்கள்
"Did you disbelieve
أَكَفَرْتُم
நிராகரித்தீர்களா?
after
بَعْدَ
பின்னர்
your belief?
إِيمَٰنِكُمْ
நீங்கள் நம்பிக்கை கொள்ளுதல்
Then taste
فَذُوقُوا۟
ஆகவே சுவையுங்கள்
the punishment
ٱلْعَذَابَ
வேதனையை
for what you used to
بِمَا كُنتُمْ
நீங்கள் இருந்த காரணத்தால்
disbelieve"
تَكْفُرُونَ
நிராகரிக்கிறீர்கள்

Yawma tabyaddu wujoohunw wa taswaddu wujooh; faammal lazeenas waddat wujoohum akafartum ba'da eemaanikum fazooqul 'azaaba bimaa kuntum takfuroon (ʾĀl ʿImrān 3:106)

Abdul Hameed Baqavi:

ஒருநாளில் சில முகங்கள் (சந்தோஷத்தால் பிரகாசமுள்ள) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கறுத்து (வாடியு)மிருக்கும். எவர்களுடைய முகங்கள் கறுத்து (வாடி) இருக்கின்றனவோ (அவர்களை நோக்கி) "நீங்கள் நம்பிக்கை கொண்டபின் (அதனை) நிராகரித்து விட்டீர்களா? ஆகவே, உங்கள் நிராகரிப்பின் காரணமாக நரக வேதனையை சுவைத்துக் கொண்டு இருங்கள்" (என்று கூறப்படும்.)

English Sahih:

On the Day [some] faces will turn white and [some] faces will turn black. As for those whose faces turn black, [to them it will be said], "Did you disbelieve [i.e., reject faith] after your belief? Then taste the punishment for what you used to reject." ([3] Ali 'Imran : 106)

1 Jan Trust Foundation

அந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து| நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகரித்து) காஃபிர்களாகி விட்டீர்களா? (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்” (என்று கூறப்படும்).