Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௪௬

وَكَاَيِّنْ مِّنْ نَّبِيٍّ قَاتَلَۙ مَعَهٗ رِبِّيُّوْنَ كَثِيْرٌۚ فَمَا وَهَنُوْا لِمَآ اَصَابَهُمْ فِيْ سَبِيْلِ اللّٰهِ وَمَا ضَعُفُوْا وَمَا اسْتَكَانُوْا ۗ وَاللّٰهُ يُحِبُّ الصّٰبِرِيْنَ   ( آل عمران: ١٤٦ )

And how many
وَكَأَيِّن
எத்தனையோ
from
مِّن
இருந்து
a Prophet
نَّبِىٍّ
நபி
fought
قَٰتَلَ
போர் புரிந்தார்
with him
مَعَهُۥ
அவருடன்
(were) religious scholars
رِبِّيُّونَ
நல்லடியார்கள்
many
كَثِيرٌ
அதிகமான
But not they lost heart
فَمَا وَهَنُوا۟
அவர்கள் துணிவிழக்கவில்லை
for what befell them
لِمَآ أَصَابَهُمْ
அவர்களுக்கு ஏற்பட்டதின் காரணமாக
in (the) way (of) Allah
فِى سَبِيلِ ٱللَّهِ
அல்லாஹ்வின் பாதையில்
and not they weakened
وَمَا ضَعُفُوا۟
இன்னும் அவர்கள் பலவீனமடையவில்லை
and not they gave in
وَمَا ٱسْتَكَانُوا۟ۗ
இன்னும் அவர்கள் பணியவில்லை
And Allah
وَٱللَّهُ
அல்லாஹ்
loves
يُحِبُّ
நேசிக்கிறான்
the patient ones
ٱلصَّٰبِرِينَ
பொறுமையாளர்களை

Wa ka aiyim min Nabiyyin qaatala ma'ahoo ribbiyyoona kaseerun famaa wahanoo limaaa Asaabahum fee sabeelil laahi wa maa da'ufoo wa mas takaanoo; wallaahu yuhibbus saabireen (ʾĀl ʿImrān 3:146)

Abdul Hameed Baqavi:

எத்தனையோ இறைத்தூதர்களும், அவர்களுடன் இறைவனின் பல நல்லடியார்களும் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் புரிந்திருக்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (போர் செய்ததனால்) தங்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தின் காரணமாக அவர்கள் தங்கள் தைரியத்தை இழந்திடவுமில்லை; பலவீனமாகிவிடவுமில்லை; (எதிரிகளுக்கு) பணிந்து விடவும் இல்லை. (இவ்வாறு கஷ்டங்களைச்) சகித்துக் கொள்பவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான்.

English Sahih:

And how many a prophet [fought in battle and] with him fought many religious scholars. But they never lost assurance due to what afflicted them in the cause of Allah, nor did they weaken or submit. And Allah loves the steadfast. ([3] Ali 'Imran : 146)

1 Jan Trust Foundation

மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்; எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை; (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.