Skip to main content

ஸூரத்துல்ஆல இம்ரான் வசனம் ௧௮௧

لَقَدْ سَمِعَ اللّٰهُ قَوْلَ الَّذِيْنَ قَالُوْٓا اِنَّ اللّٰهَ فَقِيْرٌ وَّنَحْنُ اَغْنِيَاۤءُ ۘ سَنَكْتُبُ مَا قَالُوْا وَقَتْلَهُمُ الْاَنْۢبِيَاۤءَ بِغَيْرِ حَقٍّۙ وَّنَقُوْلُ ذُوْقُوْا عَذَابَ الْحَرِيْقِ   ( آل عمران: ١٨١ )

Certainly heard
لَّقَدْ سَمِعَ
திட்டமாக கேட்டான்
Allah
ٱللَّهُ
அல்லாஹ்
(the) saying
قَوْلَ
கூற்றை
(of) those who
ٱلَّذِينَ
எவர்கள்
said
قَالُوٓا۟
கூறினார்கள்
"Indeed
إِنَّ
நிச்சயமாக
Allah
ٱللَّهَ
அல்லாஹ்
(is) poor
فَقِيرٌ
ஏழை
while we
وَنَحْنُ
இன்னும் நாங்கள்
(are) rich"
أَغْنِيَآءُۘ
சீமான்கள்
We will record
سَنَكْتُبُ
பதிவு செய்வோம்
what they said
مَا قَالُوا۟
எதை/கூறினார்கள்
and their killing
وَقَتْلَهُمُ
இன்னும் கொலை செய்ததை/அவர்கள்
the Prophets
ٱلْأَنۢبِيَآءَ
நபிமார்களை
without (any) right
بِغَيْرِ حَقٍّ
நியாயமின்றி
and We will say
وَنَقُولُ
இன்னும் கூறுவோம்
"Taste
ذُوقُوا۟
சுவையுங்கள்
(the) punishment
عَذَابَ
வேதனையை
(of) the Burning Fire"
ٱلْحَرِيقِ
எரிக்கக் கூடியது

Laqad sami'al laahu qawlal lazeena qaalooo innal laaha faqeerunw wa nahnu aghniyaaa'; sanaktubu maa qaaloo wa qatlahumul Ambiyaa'a bighairi haqqinw wa naqoolu zooqoo 'azaaba Ihreeq (ʾĀl ʿImrān 3:181)

Abdul Hameed Baqavi:

எவர்கள் "நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள்தான் சீமான்கள்" என்று கூறினார்களோ, அவர்களுடைய சொல்லை நிச்சயமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான். (இவ்வாறு) அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நிச்சயமாக நாம் பதிவு செய்து கொண்டிருக் கின்றோம். (ஆகவே, மறுமையில் அவர்களை நோக்கி) "எரிக்கும் வேதனையை நீங்கள் சுவைத்துப் பாருங்கள்" என நாம் கூறுவோம்.

English Sahih:

Allah has certainly heard the statement of those [Jews] who said, "Indeed, Allah is poor, while we are rich." We will record what they said and their killing of the prophets without right and will say, "Taste the punishment of the Burning Fire. ([3] Ali 'Imran : 181)

1 Jan Trust Foundation

“நிச்சயமாக அல்லாஹ் ஏழை; நாங்கள் தாம் சீமான்கள்” என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்; (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும் அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், “சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்” என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.