நிச்சயமாக இப்ராஹீமுக்கு மனிதர்களில் நெருங்கியவர் (எவர் என்றால்) அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இவரை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் இந்த நம்பிக்கையாளர்களை (நேசித்து) பாதுகாப்பவனாக இருக்கின்றான்.
English Sahih:
Indeed, the most worthy of Abraham among the people are those who followed him [in submission to Allah] and this prophet [i.e., Muhammad (^)] and those who believe [in his message]. And Allah is the Ally of the believers. ([3] Ali 'Imran : 68)
1 Jan Trust Foundation
நிச்சயமாக மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்; மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில் மிக நெருங்கியவர், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இஸ்லாமை ஏற்ற) நம்பிக்கையாளர்களும்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் ஆவான்.