وَقَالَتْ طَّاۤىِٕفَةٌ مِّنْ اَهْلِ الْكِتٰبِ اٰمِنُوْا بِالَّذِيْٓ اُنْزِلَ عَلَى الَّذِيْنَ اٰمَنُوْا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوْٓا اٰخِرَهٗ لَعَلَّهُمْ يَرْجِعُوْنَۚ ( آل عمران: ٧٢ )
Wa qaalat taaa'ifatum min Ahlil Kitaabi aaminoo billazeee unzila 'alal lazeena aamanoo wajhan nahaari wakfurooo aakhirahoo la'alla hum yarji'oon (ʾĀl ʿImrān 3:72)
Abdul Hameed Baqavi:
வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: "நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதனை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கை கொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்" (என்றும்)
English Sahih:
And a faction of the People of the Scripture say [to each other], "Believe in that which was revealed to the believers at the beginning of the day and reject it at its end that perhaps they will return [i.e., abandon their religion], ([3] Ali 'Imran : 72)
1 Jan Trust Foundation
வேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்)| “ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்; இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்” என்று கூறுகின்றனர்.