(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மரணத்தை விட்டு அல்லது வெட்டுப்படுவதை விட்டு நீங்கள் வெருண்டோடியபோதிலும், உங்களுடைய ஓட்டம் உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது. இச்சமயம் (நீங்கள் தப்பித்துக் கொண்டபோதிலும்) வெகு சொற்ப நாள்களன்றி (அதிக நாள்கள்) நீங்கள் சுகமனுபவிக்க மாட்டீர்கள்."
English Sahih:
Say, [O Muhammad], "Never will fleeing benefit you if you should flee from death or killing; and then [if you did], you would not be given enjoyment [of life] except for a little." ([33] Al-Ahzab : 16)
1 Jan Trust Foundation
“மரணத்தை விட்டோ அல்லது கொல்லப்படுவதை விட்டோ, நீங்கள் விரண்டு ஓடினீர்களாயின், அவ்வாறு விரண்டு ஓடுவது உங்களுக்கு யாதொரு பயனும் அளிக்காது - அது சமயம் வெகு சொற்பமேயன்றி (அதிக) சுகம் அனுபவிக்க மாட்டீர்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில்) சுகமளிக்கப்பட மாட்டீர்கள்.