எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயப்பட்டு நடக்கின் றார்களோ அவர்களுக்கு, (சுவனபதியில்) மேல்மாடிகள் உண்டு. அதற்கு மென்மேலும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருக்கும். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும். (இவ்வாறே அவர்களுக்கு) அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியில் மாறமாட்டான்.
English Sahih:
But those who have feared their Lord – for them are chambers, above them chambers built high, beneath which rivers flow. [This is] the promise of Allah. Allah does not fail in [His] promise. ([39] Az-Zumar : 20)
1 Jan Trust Foundation
ஆனால், எவர்கள் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களுக்கு அடுக்கடுக்கான மேன்மாளிகைகள் உண்டு; அவற்றின் கீழே ஆறுகள் சதா ஓடிக் கொண்டிருக்கும். (இதுவே) அல்லாஹ்வின் வாக்குறுதி - அல்லாஹ் தன் வாக்குறுதியில் மாற மாட்டான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சினார்களோ அவர்களுக்கு மாடி அறைகள் உண்டு. அவற்றுக்குமேல் (-அந்த அறைகளுக்கு மேல் இன்னும் பல) அறைகள் கட்டப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி நதிகள் ஓடும். (இது) அல்லாஹ்வின் வாக்காகும். அல்லாஹ் (தனது) வாக்கை மாற்றமாட்டான்.