தன் அடியாருக்கு (வேண்டிய உதவி செய்ய) அல்லாஹ் (ஒருவனே) போதுமானவனல்லவா? (நபியே!) அவர்கள் (தங்கள் தெய்வங்களாகிய) அல்லாஹ் அல்லாதவைகளைப் பற்றி உங்களை பயமுறுத்துகின்றனர். (அதை நீங்கள் பொருட்படுத்த வேண்டாம்.) எவனை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகின்றானோ, அவனை நேரான வழியில் செலுத்தக்கூடியவன் ஒருவனுமில்லை.
English Sahih:
Is not Allah sufficient for His Servant [i.e., Prophet Muhammad (^)]? And [yet], they threaten you with those [they worship] other than Him. And whoever Allah leaves astray – for him there is no guide. ([39] Az-Zumar : 36)
1 Jan Trust Foundation
அல்லாஹ்வே அவனுடைய அடியாருக்குப் போதுமானவனல்லவா? இன்னும் அவனை அல்லாத (வேறு தெய்வங்களாகவுள்ள) அவர்களைக் கொண்டு அவர்கள் உம்மைப் பயமுறுத்துகின்றனர்; மேலும், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர் வழியில் நடத்துவோர் எவருமில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகின்றனர். யாரை அல்லாஹ் வழிகெடுத்து விடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.