எவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு, நன்மையும் செய்து, இப்ராஹீமுடைய நேரான (இம்)மார்க்கத்தையும் பின்பற்று கின்றாரோ அவரை விட அழகான மார்க்கத்தை உடையவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை(த் தன்னுடைய) உண்மை நண்பராக எடுத்துக் கொண்டிருக்கின்றான்.
English Sahih:
And who is better in religion than one who submits himself to Allah while being a doer of good and follows the religion of Abraham, inclining toward truth? And Allah took Abraham as an intimate friend. ([4] An-Nisa : 125)
1 Jan Trust Foundation
மேலும், எவர் நன்மை செய்யக்கூடிய நிலையில் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்டு, இப்ராஹீமுடைய தூய மார்க்கத்தையும் பின் பற்றுகிறாரோ அவரைவிட அழகிய மார்க்கத்தை உடையவர் யார்? இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை தன் மெய்யன்பராக எடுத்துக் கொண்டான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைத்து, அவர் நற்குணமுடையவராக இருக்க, இப்றாஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியுடையவராக பின்பற்றியவரைவிட மார்க்கத்தால் மிக அழகானவர் யார்? அல்லாஹ் இப்றாஹீமை நண்பராக எடுத்துக் கொண்டான்.