Skip to main content

ஸூரத்துன்னிஸாவு வசனம் ௫௫

فَمِنْهُمْ مَّنْ اٰمَنَ بِهٖ وَمِنْهُمْ مَّنْ صَدَّ عَنْهُ ۗ وَكَفٰى بِجَهَنَّمَ سَعِيْرًا  ( النساء: ٥٥ )

Then of them
فَمِنْهُم
அவர்களில் உண்டு
(are some) who
مَّنْ
எவர்
believed
ءَامَنَ
நம்பிக்கை கொண்டார்
in him
بِهِۦ
அதை
and of them
وَمِنْهُم
இன்னும் அவர்களில்
(are some) who
مَّن
எவர்
turned away
صَدَّ
தடுத்தார்
from him
عَنْهُۚ
அதை விட்டு
and sufficient
وَكَفَىٰ
போதுமாகும்
(is) Hell
بِجَهَنَّمَ
நரகமே
(as a) Blazing Fire
سَعِيرًا
கொழுந்து விட்டெரியும் நெருப்பால்

Faminhum man aamana bihee wa minhum man sadda 'anh; wa kafaa bi Jahannama sa'eeraa (an-Nisāʾ 4:55)

Abdul Hameed Baqavi:

அவ்வாறிருந்தும் அவர்களில் சிலர்தான் அவ்வேதத்தை நம்பிக்கை கொண்டார்கள். மற்றோர் நிராகரித்துவிட்டார்கள். (நிராகரித்த அவர்களுக்கு) கொழுந்து விட்டெரியும் நரகமே தகுமா(ன கூலியா)கும்.

English Sahih:

And some among them believed in it, and some among them were averse to it. And sufficient is Hell as a blaze. ([4] An-Nisa : 55)

1 Jan Trust Foundation

(அவ்வாறிருந்தும்) அவர்களில் சிலர் நம்பிக்கை கொண்டார்கள்; சிலர் தங்கள் முகங்களை அதைவிட்டும் திருப்பிக் கொண்டார்கள்; (இவ்வாறு முகந் திருப்பிக் கொண்டோருக்கு) கொழுந்து விட்டு எரியும் நரகமே போதுமானது.