Skip to main content

ஸூரத்துல் முஃமின் வசனம் ௧௮

وَاَنْذِرْهُمْ يَوْمَ الْاٰزِفَةِ اِذِ الْقُلُوْبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِيْنَ ەۗ مَا لِلظّٰلِمِيْنَ مِنْ حَمِيْمٍ وَّلَا شَفِيْعٍ يُّطَاعُۗ  ( غافر: ١٨ )

And warn them
وَأَنذِرْهُمْ
அவர்களை நீர் எச்சரிப்பீராக!
(of the) Day the Approaching
يَوْمَ ٱلْءَازِفَةِ
நெருங்கி வரக்கூடிய நாளைப் பற்றி
when the hearts
إِذِ ٱلْقُلُوبُ
போது/உள்ளங்கள்
(are) at the throats
لَدَى ٱلْحَنَاجِرِ
தொண்டைகளுக்கு அருகில்
choked
كَٰظِمِينَۚ
துக்கம் நிறைந்தவர்களாக
Not for the wrongdoers
مَا لِلظَّٰلِمِينَ
அந்த அநியாயக்காரர்களுக்கு இருக்கமாட்டார்
any intimate friend
مِنْ حَمِيمٍ
நண்பர் எவரும்
and no intercessor
وَلَا شَفِيعٍ
இன்னும் ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்
(who) is obeyed
يُطَاعُ
ஏற்றுக்கொள்ளப்படுகின்றார்

Wa anzirhum yawmal aazifati izil quloobu ladal hanaajiri kaazimeen; maa lizzaalimeena min hameeminw wa laa shafee'iny-yutaa' (Ghāfir 40:18)

Abdul Hameed Baqavi:

(நபியே!) சமீபத்திலிருக்கும் (மறுமை) நாளைப் பற்றி நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் (அந்நாளில் அவர்களுடைய) உள்ளங்கள் கோபத்தால் அவர்களின் தொண்டைகளை அடைத்துக்கொள்ளும். அநியாயம் செய்பவர் களுக்கு உதவி செய்பவர்கள் (அந்நாளில்) ஒருவரும் இருக்க மாட்டார். அனுமதி பெற்ற சிபாரிசு செய்பவர்களும் இருக்க மாட்டார்.

English Sahih:

And warn them, [O Muhammad], of the Approaching Day, when hearts are at the throats, filled [with distress]. For the wrongdoers there will be no devoted friend and no intercessor [who is] obeyed. ([40] Ghafir : 18)

1 Jan Trust Foundation

(நபியே!) அண்மையில் வரும் (கியாம) நாளைப்பற்றி அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக; இருதயங்கள் விசனத்தால் நிரம்பி தொண்டைக்குழிகளுக்கு வரும் (அவ்)வேளையில், அநியாயக்காரர்களுக்கு இரக்கப்படும் நண்பனோ, அல்லது ஏற்றுக்கொள்ளப்படும் சிபாரிசு செய்பவனோ இருக்கமாட்டான்.