اِنَّ الَّذِيْنَ يُجَادِلُوْنَ فِيْٓ اٰيٰتِ اللّٰهِ بِغَيْرِ سُلْطٰنٍ اَتٰىهُمْ ۙاِنْ فِيْ صُدُوْرِهِمْ اِلَّا كِبْرٌ مَّا هُمْ بِبَالِغِيْهِۚ فَاسْتَعِذْ بِاللّٰهِ ۗاِنَّهٗ هُوَ السَّمِيْعُ الْبَصِيْرُ ( غافر: ٥٦ )
Innal lazeena yujaadi loona feee Aayaatil laahi bighairi sultaanin ataahum in fee sudoorihim illaa kibrum maa hum bibaaligheeh; fasta'iz billaahi innahoo Huwas Samee'ul Baseer (Ghāfir 40:56)
Abdul Hameed Baqavi:
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் யாதொரு ஆதாரமு மில்லாமல், (இருக்கும் நிலைமையில்) அல்லாஹ்வுடைய வசனங்களைப் பற்றித் தர்க்கிக்கின்றார்களோ, அவர்களுடைய உள்ளங்களில் (வெறும்) பெருமையைத் தவிர வேறொன்றுமில்லை. (அப்பெருமையை) அவர்கள் அடையவும் மாட்டார்கள். ஆகவே, (உங்களை) பாதுகாத்துக் கொள்ளுமாறு அல்லாஹ்விடம் நீங்கள் கோருங்கள். நிச்சயமாக அவன் (அனைத்தையும்) செவியுறு பவனாகவும் உற்று நோக்குபவனாகவும் இருக்கின்றான்.
English Sahih:
Indeed, those who dispute concerning the signs of Allah without [any] evidence having come to them – there is not within their breasts except pride, [the extent of] which they cannot reach. So seek refuge in Allah. Indeed, it is He who is the Hearing, the Seeing. ([40] Ghafir : 56)
1 Jan Trust Foundation
நிச்சயமாக எவர்கள் தங்களிடம் வந்த அல்லாஹ்வுடைய வசனங்களைப்பற்றி எந்த ஆதாரமுமின்றித் தர்க்கம் செய்கின்றார்களோ, அவர்களுடைய இருதயங்களில் பெருமை தவிர (வேறு எதுவும்) இல்லை; ஆனால் அ(ப் பெருமையான)தை அவர்கள் அடையவும் மாட்டார்கள்; ஆகவே (நபியே!) நீர் அல்லாஹ்விடமே பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன், யாவற்றையும் செவியேற்பவன், பார்ப்பவன்.