Skip to main content

ஸூரத்து முஹம்மது வசனம் ௧௯

فَاعْلَمْ اَنَّهٗ لَآ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِۚ وَاللّٰهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰىكُمْ ࣖ  ( محمد: ١٩ )

So know
فَٱعْلَمْ
நன்கறிந்து கொள்வீராக!
that [He] -
أَنَّهُۥ
நிச்சயமாக
(there is) no
لَآ
அறவே இல்லை
god
إِلَٰهَ
வணக்கத்திற்குரியவன்
but Allah
إِلَّا ٱللَّهُ
அல்லாஹ்வைத் தவிர
and ask forgiveness
وَٱسْتَغْفِرْ
இன்னும் பாவமன்னிப்பு கோருவீராக!
for your sin
لِذَنۢبِكَ
உமது தவறுகளுக்காக
and for the believing men
وَلِلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும்
and the believing women
وَٱلْمُؤْمِنَٰتِۗ
நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும்
And Allah knows
وَٱللَّهُ يَعْلَمُ
அல்லாஹ் நன்கறிவான்
your movement
مُتَقَلَّبَكُمْ
நீங்கள் சுற்றித்திரியும் இடங்களை(யும்)
and your resting places
وَمَثْوَىٰكُمْ
நீங்கள் தங்குமிடங்களையும்

Fa'lam annahoo laaa ilaaha illal laahu wastaghfir lizambika wa lilmu'mineena walmu'minaat; wallaahu ya'lamu mutaqallabakum wa maswaakum (Muḥammad 47:19)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரிய வேறொரு இறைவன் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொண்டு, நீங்கள் உங்களுடைய தவறுகளை மன்னிக்கக் கோருவதுடன், நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்க ளுக்கும் மன்னிப்பு கோருங்கள்! (நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய நடமாட்டத்தையும் நீங்கள் தங்கும் இடங்களையும் அல்லாஹ் நன்கறிவான்.

English Sahih:

So know, [O Muhammad], that there is no deity except Allah and ask forgiveness for your sin and for the believing men and believing women. And Allah knows of your movement and your resting place. ([47] Muhammad : 19)

1 Jan Trust Foundation

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக; இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களான ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக - அன்றியும் உங்களுடைய நடமாட்டத்தலத்தையும் உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிகிறான்.