Skip to main content

ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௨௭

لَقَدْ صَدَقَ اللّٰهُ رَسُوْلَهُ الرُّءْيَا بِالْحَقِّ ۚ لَتَدْخُلُنَّ الْمَسْجِدَ الْحَرَامَ اِنْ شَاۤءَ اللّٰهُ اٰمِنِيْنَۙ مُحَلِّقِيْنَ رُءُوْسَكُمْ وَمُقَصِّرِيْنَۙ لَا تَخَافُوْنَ ۗفَعَلِمَ مَا لَمْ تَعْلَمُوْا فَجَعَلَ مِنْ دُوْنِ ذٰلِكَ فَتْحًا قَرِيْبًا   ( الفتح: ٢٧ )

Certainly
لَّقَدْ
திட்டவட்டமாக
Allah has fulfilled
صَدَقَ
உண்மையாக நிகழ்த்தினான்
Allah has fulfilled
ٱللَّهُ
அல்லாஹ்
His Messenger's
رَسُولَهُ
தனது தூதருக்கு
vision
ٱلرُّءْيَا
கனவை
in truth
بِٱلْحَقِّۖ
யதார்த்தத்தில்
Surely, you will enter
لَتَدْخُلُنَّ
நிச்சயமாக நீங்கள் நுழைவீர்கள்
Al-Masjid Al-Haraam
ٱلْمَسْجِدَ
மஸ்ஜிதில்
Al-Masjid Al-Haraam
ٱلْحَرَامَ
புனிதமான(து)
if Allah wills
إِن شَآءَ
நாடினால்
Allah wills
ٱللَّهُ
அல்லாஹ்
secure
ءَامِنِينَ
பாதுகாப்பு பெற்றவர்களாக
having shaved
مُحَلِّقِينَ
சிரைத்தவர்களாக
your heads
رُءُوسَكُمْ
உங்கள் தலை(முடி)களை
and shortened
وَمُقَصِّرِينَ
இன்னும் குறைத்தவர்களாக
not fearing
لَا تَخَافُونَۖ
பயப்பட மாட்டீர்கள்
But He knew
فَعَلِمَ
அவன் அறிவான்
what not you knew
مَا لَمْ تَعْلَمُوا۟
நீங்கள் அறியாதவற்றை
and He made
فَجَعَلَ
ஏற்படுத்தினான்
besides besides that
مِن دُونِ ذَٰلِكَ
அதற்கு முன்பாக
a victory
فَتْحًا
ஒரு வெற்றியை
near
قَرِيبًا
சமீபமான

Laqad sadaqal laahu Rasoolahur ru'yaa bilhaqq, latadkhulunnal Masjidal-Haraama in shaaa'al laahu aamineena muhalliqeena ru'oosakum wa muqassireena laa takhaafoona fa'alima maa lam ta'lamoo faja'ala min dooni zaalika fathan qareebaa (al-Fatḥ 48:27)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு அவர் கண்ட கனவை மெய்யாகவே உண்மையாக்கி வைத்துவிட்டான். அல்லாஹ் நாடினால், நிச்சயமாக நீங்கள் சிறப்புற்ற மஸ்ஜிதில் அச்சமற்றவர் களாகவும், உங்களுடைய தலை ரோமத்தைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும், கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். அச்சமயம், நீங்கள் (ஒருவருக்கும்) பயப்பட மாட்டீர்கள். (அச்சமயம்) நீங்கள் அறியாதிருந்ததை (ஏற்கனவே அல்லாஹ்) அறிந்திருந்தான். ஆகவே, இதனையன்றி உடனடியான மற்றொரு வெற்றியையும் உங்களுக்குக் கொடுத்தான்.

English Sahih:

Certainly has Allah showed to His Messenger the vision [i.e., dream] in truth. You will surely enter al-Masjid al-Haram, if Allah wills, in safety, with your heads shaved and [hair] shortened, not fearing [anyone]. He knew what you did not know and has arranged before that a conquest near [at hand]. ([48] Al-Fath : 27)

1 Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான்; அல்லாஹ் விரும்பினால், நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சந்தீர்ந்தவர்களாகவும், உங்களுடைய தலைகளைச் சிரைத்துக் கொண்டவர்களாகவும்;, (உரோமம்) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள் (அப்போதும் எவருக்கும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள், ஆகவே, நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான் - (அதன் பின்னர்) இதனை அன்றி நெருங்கிய ஒரு வெற்றியையும் (உங்களுக்கு) ஆக்கிக் கொடுத்தான்,