Skip to main content
bismillah

إِنَّا
நிச்சயமாக நாம்
فَتَحْنَا
வெற்றி வழங்கினோம்
لَكَ
உமக்கு
فَتْحًا مُّبِينًا
தெளிவானவெற்றியாக

Innaa fatahnaa laka Fatham Mubeenaa

(நபியே! ஹுதைபிய்யாவின் சமாதான உடன்படிக்கையின் மூலம்) நிச்சயமாக நாம் உங்களுக்கு (மிகப்பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்.

Tafseer

لِّيَغْفِرَ
மன்னிப்பதற்காக(வும்)
لَكَ ٱللَّهُ
உமக்கு/அல்லாஹ்
مَا تَقَدَّمَ
முந்தியதையும்
مِن ذَنۢبِكَ
உமது பாவத்தில்
وَمَا تَأَخَّرَ
பிந்தியதையும்
وَيُتِمَّ
முழுமைப்படுத்துவதற்காகவும்
نِعْمَتَهُۥ
அவனது அருளை
عَلَيْكَ
உம்மீது
وَيَهْدِيَكَ
உமக்கு வழி காண்பிப்பதற்காகவும்
صِرَٰطًا مُّسْتَقِيمًا
நேரான பாதையை

Liyaghfira lakal laahu maa taqaddama min zambika wa maa ta akhkhara wa yutimma ni'matahoo 'alaika wa yahdiyaka siraatam mustaqeema

(அதற்காக நீங்கள் உங்களது இறைவனுக்கு நன்றி செலுத்து வீராக! அதனால்,) உங்களது முன் பின்னுள்ள தவறுகள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்துத் தனது அருட்கொடையையும் உங்கள் மீது முழுமைபடுத்தி வைத்து, உங்களை அவன் நேரான வழியிலும் நடத்துவான்.

Tafseer

وَيَنصُرَكَ
உமக்கு உதவி செய்வதற்காகவும்
ٱللَّهُ
அல்லாஹ்
نَصْرًا
உதவி
عَزِيزًا
மிக கம்பீரமான

Wa yansurakal laahu nasran 'azeezaa

(நபியே!) மேலும் (தொடர்ந்து) அல்லாஹ் உங்களுக்குப் பலமான உதவி புரிந்தே வருவான்.

Tafseer

هُوَ
அவன்தான்
ٱلَّذِىٓ
எப்படிப்பட்டவன்
أَنزَلَ
இறக்கினான்
ٱلسَّكِينَةَ
அமைதியை
فِى قُلُوبِ
உள்ளங்களில்
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களின்
لِيَزْدَادُوٓا۟
அவர்கள் அதிகரிப்பதற்காக
إِيمَٰنًا
நம்பிக்கையால்
مَّعَ إِيمَٰنِهِمْۗ
அவர்கள் தங்கள் நம்பிக்கையுடன்
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு உரியனவே
جُنُودُ
இராணுவங்கள்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلِيمًا
நன்கறிந்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Huwal lazeee anzalas sakeenata fee quloobil mu'mineena liyazdaadooo eemaanamma'a eemaanihim; wa lillaahi junoodus samawaati wal ard; wa kaanal laahu 'Aleeman Hakeemaa

நம்பிக்கை கொண்டவர்களுடைய உள்ளங்களில் அவன்தான் சாந்தியையும், ஆறுதலையும் அளித்து, அவர்களுடைய நம்பிக்கை மென்மேலும் அதிகரிக்கும்படி செய்தான். வானங்கள், பூமி முதலிய வைகளிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியனவே. (அவைகளைக் கொண்டு அவன் விரும்பியவர்களுக்கு உதவி புரிவான்.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்.

Tafseer

لِّيُدْخِلَ
அவன் நுழைப்பதற்காக(வும்)
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்ட ஆண்களையும்
وَٱلْمُؤْمِنَٰتِ
நம்பிக்கை கொண்ட பெண்களையும்
جَنَّٰتٍ
சொர்க்கங்களில்
تَجْرِى
ஓடும்
مِن تَحْتِهَا
அவற்றின் கீழ்
ٱلْأَنْهَٰرُ
நதிகள்
خَٰلِدِينَ
அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள்
فِيهَا
அதில்
وَيُكَفِّرَ
அகற்றுவதற்காகவும்
عَنْهُمْ
அவர்களை விட்டும்
سَيِّـَٔاتِهِمْۚ
அவர்களின் பாவங்களை
وَكَانَ
இருக்கின்றது
ذَٰلِكَ
இதுதான்
عِندَ ٱللَّهِ
அல்லாஹ்விடம்
فَوْزًا
வெற்றியாக
عَظِيمًا
மகத்தான

Liyudkhilal mu'mineena walmu'minaati jannaatin tajree min tahtihal anhaaru khaalideena feehaa wa yukaffira 'anhum saiyi aatihim; wa kaana zaalika 'indal laahi fawzan 'azeemaa

(அல்லாஹ்) நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் சுவனபதிகளில் புகுத்துவான். அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக்கொண்டேயிருக்கும். என்றென்றும் அவர்கள் அதில் தங்கிவிடுவார்கள். அவர்களின் பாவச்சுமையையும், அவர்களிலிருந்தும் நீக்கி விடுவான். இது அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் மகத்தான ஒரு வெற்றியாக இருக்கின்றது..

Tafseer

وَيُعَذِّبَ
வேதனை செய்வதற்காகவும்
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சக ஆண்களை(யும்)
وَٱلْمُنَٰفِقَٰتِ
நயவஞ்சக பெண்களையும்
وَٱلْمُشْرِكِينَ
இணைவைக்கின்ற ஆண்களையும்
وَٱلْمُشْرِكَٰتِ
இணைவைக்கின்ற பெண்களையும்
ٱلظَّآنِّينَ
எண்ணுகின்றனர்
بِٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
ظَنَّ ٱلسَّوْءِۚ
கெட்ட எண்ணம்
عَلَيْهِمْ
அவர்கள் மீதுதான்
دَآئِرَةُ
சுழற்சி இருக்கிறது
ٱلسَّوْءِۖ
கெட்ட
وَغَضِبَ
கோபப்படுகின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَلَيْهِمْ
அவர்கள் மீது
وَلَعَنَهُمْ
இன்னும் அவர்களை சபிக்கின்றான்
وَأَعَدَّ
இன்னும் தயார் செய்துள்ளான்
لَهُمْ
அவர்களுக்கு
جَهَنَّمَۖ
நரகத்தை
وَسَآءَتْ مَصِيرًا
அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்

Wa yu'azzibal munaafiqeena walmunaafiqaati wal mushrikeena walmushrikaatiz zaaanneena billaahi zannas saw'; 'alaihim daaa'iratus saw'i wa ghadibal laahu 'alaihim wa la'anahum wa a'adda lahum jahannama wa saaa' at maseeraa

அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்ளும் நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்தே தீருவான். வேதனை அவர்கள் (தலைக்கு) மேல் சூழ்ந்துகொண்டு இருக்கின்றது. அல்லாஹ் அவர்கள் மீது கோபப்பட்டு, அவர்களைச் சபித்து, அவர்களுக்காக நரகத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.

Tafseer

وَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
جُنُودُ
இராணுவங்கள்
ٱلسَّمَٰوَٰتِ
வானங்கள்
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியின்
وَكَانَ
இருக்கின்றான்
ٱللَّهُ
அல்லாஹ்
عَزِيزًا
மிகைத்தவனாக
حَكِيمًا
மகா ஞானவானாக

Wa lillaahi junoodus samaawaati wal ard; wa kaanal laahu 'azeezan hakeema

வானங்கள் பூமியிலுள்ள படைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவையே. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.

Tafseer

إِنَّآ
நிச்சயமாக நாம்
أَرْسَلْنَٰكَ
உம்மை அனுப்பினோம்
شَٰهِدًا
சாட்சியாளராக(வும்)
وَمُبَشِّرًا
நற்செய்தி கூறுபவராகவும்
وَنَذِيرًا
எச்சரிப்பவராகவும்

Innaaa arsalnaaka shaahi danw wa mubashshiranw wa nazeera

(நபியே!) நிச்சயமாக நாம் உங்களை (நம்பிக்கையாளர்களின் ஈமானைப் பற்றி) சாட்சி கூறுவதற்காகவும், (அவர்களுக்கு) நற்செய்தி கூறுவதற்காகவும், (பாவிகளுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும் அனுப்பி வைத்தோம்.

Tafseer

لِّتُؤْمِنُوا۟
நீங்கள் நம்பிக்கை கொள்வதற்காக(வும்)
بِٱللَّهِ
அல்லாஹ்வை
وَرَسُولِهِۦ
அவனது தூதரையும்
وَتُعَزِّرُوهُ
அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும்
وَتُوَقِّرُوهُ
அவரை மதிப்பதற்காகவும்
وَتُسَبِّحُوهُ
அவனைப் புகழ்ந்து துதிப்பதற்காகவும்
بُكْرَةً
காலை(யிலும்)
وَأَصِيلًا
மாலையிலும்

Litu minoo billaahi wa Rasoolihee wa tu'azziroohu watuwaqqiroohu watusabbi hoohu bukratanw wa aseelaa

ஆகவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உதவி புரிந்து, அவரை கண்ணியப்படுத்தி வைத்து, காலையிலும் மாலையிலும் அவனை துதி செய்து வாருங்கள்.

Tafseer

إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக/எவர்கள்/உம்மிடம் விசுவாச உறுதிமொழி செய்கின்றார்கள்
إِنَّمَا يُبَايِعُونَ
அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம்
ٱللَّهَ
அல்லாஹ்விடம்தான்
يَدُ
கை
ٱللَّهِ
அல்லாஹ்வின்
فَوْقَ
மேல் இருக்கிறது
أَيْدِيهِمْۚ
அவர்களின் கைகளுக்கு
فَمَن نَّكَثَ
ஆகவேயார் முறிப்பாரோ
فَإِنَّمَا يَنكُثُ
அவர்முறிப்பதெல்லாம்
عَلَىٰ نَفْسِهِۦۖ
தனக்கு எதிராகத்தான்
وَمَنْ أَوْفَىٰ
யார் நிறைவேற்றுவாரோ
بِمَا عَٰهَدَ
எதை/ ஒப்பந்தம் செய்தாரோ
عَلَيْهُ
அதன் மீது
ٱللَّهَ
அல்லாஹ்விடம்
فَسَيُؤْتِيهِ
அவருக்குக்
أَجْرًا
கூலியை
عَظِيمًا
மகத்தான(து)

Innal lazeena yubaayi'oonaka innamaa yubaayi'oonal laaha yadul laahi fawqa aydehim; faman nakasa fainnamaa yuankusu 'alaa nafsihee wa man awfaa bimaa 'aahada 'alihul laaha fasa yu'teehi ajran 'azeemaa

(நபியே!) எவர்கள் (தம்முடைய உடல், பொருள், ஆவியை தியாகம் செய்து உங்களுக்கு உதவி புரிவதாக ஹுதைபிய்யாவில்) உங்களுடைய கையைப் பிடித்து வாக்குறுதி செய்கின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர். அவர்கள் கை மீது அல்லாஹ்வுடைய கைதான் இருக்கின்றது. ஆகவே, (அவ்வாக்குறுதியை) எவன் முறித்து விடுகின்றானோ, அவன் தனக்குக் கேடாகவே அதனை முறிக்கின்றான். எவன் அல்லாஹ்விடம் செய்த அந்த வாக்குறுதியை முழுமைப்படுத்தி வைக்கின்றானோ, அவனுக்கு அல்லாஹ் மகத்தான கூலியை அதி சீக்கிரத்தில் (நிச்சயமாக) கொடுப்பான்.

Tafseer
குர்ஆன் தகவல் :
ஸூரத்துல் ஃபத்ஹ்
القرآن الكريم:الفتح
ஸஜ்தா (سجدة):-
ஸூரா (latin):Al-Fath
ஸூரா:48
வசனம்:29
Total Words:568
Total Characters:2559
Number of Rukūʿs:4
Classification
(Revelation Location):
மதனீ
Revelation Order:111
Starting from verse:4583