Skip to main content

ஸூரத்துல் ஃபத்ஹ் வசனம் ௬

وَّيُعَذِّبَ الْمُنٰفِقِيْنَ وَالْمُنٰفِقٰتِ وَالْمُشْرِكِيْنَ وَالْمُشْرِكٰتِ الظَّاۤنِّيْنَ بِاللّٰهِ ظَنَّ السَّوْءِۗ عَلَيْهِمْ دَاۤىِٕرَةُ السَّوْءِۚ وَغَضِبَ اللّٰهُ عَلَيْهِمْ وَلَعَنَهُمْ وَاَعَدَّ لَهُمْ جَهَنَّمَۗ وَسَاۤءَتْ مَصِيْرًا   ( الفتح: ٦ )

And He (may) punish
وَيُعَذِّبَ
வேதனை செய்வதற்காகவும்
the hypocrite men
ٱلْمُنَٰفِقِينَ
நயவஞ்சக ஆண்களை(யும்)
and the hypocrite women
وَٱلْمُنَٰفِقَٰتِ
நயவஞ்சக பெண்களையும்
and the polytheist men
وَٱلْمُشْرِكِينَ
இணைவைக்கின்ற ஆண்களையும்
and the polytheist women
وَٱلْمُشْرِكَٰتِ
இணைவைக்கின்ற பெண்களையும்
who assume
ٱلظَّآنِّينَ
எண்ணுகின்றனர்
about Allah
بِٱللَّهِ
அல்லாஹ்வின் விஷயத்தில்
an assumption evil
ظَنَّ ٱلسَّوْءِۚ
கெட்ட எண்ணம்
Upon them
عَلَيْهِمْ
அவர்கள் மீதுதான்
(is) a turn
دَآئِرَةُ
சுழற்சி இருக்கிறது
(of) evil
ٱلسَّوْءِۖ
கெட்ட
and Allah's wrath (is)
وَغَضِبَ
கோபப்படுகின்றான்
and Allah's wrath (is)
ٱللَّهُ
அல்லாஹ்
upon them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
and He has cursed them
وَلَعَنَهُمْ
இன்னும் அவர்களை சபிக்கின்றான்
and prepared
وَأَعَدَّ
இன்னும் தயார் செய்துள்ளான்
for them
لَهُمْ
அவர்களுக்கு
Hell
جَهَنَّمَۖ
நரகத்தை
and evil (is the) destination
وَسَآءَتْ مَصِيرًا
அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்

Wa yu'azzibal munaafiqeena walmunaafiqaati wal mushrikeena walmushrikaatiz zaaanneena billaahi zannas saw'; 'alaihim daaa'iratus saw'i wa ghadibal laahu 'alaihim wa la'anahum wa a'adda lahum jahannama wa saaa' at maseeraa (al-Fatḥ 48:6)

Abdul Hameed Baqavi:

அல்லாஹ்வைப் பற்றிக் கெட்ட எண்ணம் கொள்ளும் நயவஞ்சகமுள்ள ஆண்களையும் பெண்களையும், இணை வைத்து வணங்கும் ஆண்களையும் பெண்களையும் (அல்லாஹ்) வேதனை செய்தே தீருவான். வேதனை அவர்கள் (தலைக்கு) மேல் சூழ்ந்துகொண்டு இருக்கின்றது. அல்லாஹ் அவர்கள் மீது கோபப்பட்டு, அவர்களைச் சபித்து, அவர்களுக்காக நரகத்தையும் தயார்படுத்தி வைத்திருக்கின்றான். அது செல்லுமிடங்களில் மகா கெட்டது.

English Sahih:

And [that] He may punish the hypocrite men and hypocrite women, and the polytheist men and polytheist women – those who assume about Allah an assumption of evil nature. Upon them is a misfortune of evil nature; and Allah has become angry with them and has cursed them and prepared for them Hell, and evil it is as a destination. ([48] Al-Fath : 6)

1 Jan Trust Foundation

அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்து கொண்டு இருக்கிறது; இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்களைச் சபித்தும் விட்டான்; அவர்களுக்காக நரகத்தையும் சித்தம் செய்திருக்கின்றான் - (அதுதான்) செல்லுமிடங்களில் மிகவும் கெட்டது.