(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) "மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் செல்லவே மாட்டோம். நீங்களும், உங்களுடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) போர் புரியுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம்" என்று கூறினார்கள்.
English Sahih:
They said, "O Moses, indeed we will not enter it, ever, as long as they are within it; so go, you and your Lord, and fight. Indeed, we are remaining right here." ([5] Al-Ma'idah : 24)
1 Jan Trust Foundation
அதற்கவர்கள், “மூஸாவே! அவர்கள் அதற்குள் இருக்கும் வரை நாங்கள் ஒரு போதும் அதில் நுழையவே மாட்டோம்; நீரும், உம்முடைய இறைவனும் இருவருமே சென்று போர் செய்யுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
"மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழையவே மாட்டோம். ஆகவே, நீயும், உன் இறைவனும் சென்று போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்" என்று கூறினர்.