قُلْ اَغَيْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِيًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ يُطْعِمُ وَلَا يُطْعَمُ ۗ قُلْ اِنِّيْٓ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ ( الأنعام: ١٤ )
Qul aghairal laahi attakhizu waliyyan faatiris samaawaati wal ardi wa Huwa yut'imu wa laa yut'am; qul inneee umirtu an akoona awwala man salama wa laa takoonanna minal mushrikeen (al-ʾAnʿām 6:14)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வை அன்றி (மற்றெவரையும் என்னை) பாதுகாப்பவனாக நான் எடுத்துக் கொள்வேனா? அவன்தான் (நமக்கு) உணவளிக்கின்றான்; அவனுக்கு யாரும் அளிப்பதில்லை. (மேலும்) நீங்கள் கூறுங்கள்: "(இறைவனுக்கு) இணைவைத்து வணங்குபவர்களுடன் சேராது முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக நான் இருக்கும்படியே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது.
English Sahih:
Say, "Is it other than Allah I should take as a protector, Creator of the heavens and earth, while it is He who feeds and is not fed?" Say, [O Muhammad], "Indeed, I have been commanded to be the first [among you] who submit [to Allah] and [was commanded], 'Do not ever be of the polytheists." ([6] Al-An'am : 14)
1 Jan Trust Foundation
“வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் என் பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேனா? அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை” என்று (நபியே!) நீர் கூறுவீராக| இன்னும் (அல்லாஹ்வுக்கு வழிபடுபவர்களில் முதன்மையானவனாக, இருக்கும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்) என்று கூறுவீராக. இன்னும் நீர் ஒருக்காலும் இணைவைப்போரில் ஒருவராகிவிட வேண்டாம்.