Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௧௪௬

وَعَلَى الَّذِيْنَ هَادُوْا حَرَّمْنَا كُلَّ ذِيْ ظُفُرٍۚ وَمِنَ الْبَقَرِ وَالْغَنَمِ حَرَّمْنَا عَلَيْهِمْ شُحُوْمَهُمَآ اِلَّا مَا حَمَلَتْ ظُهُوْرُهُمَآ اَوِ الْحَوَايَآ اَوْ مَا اخْتَلَطَ بِعَظْمٍۗ ذٰلِكَ جَزَيْنٰهُمْ بِبَغْيِهِمْۚ وَاِنَّا لَصٰدِقُوْنَ   ( الأنعام: ١٤٦ )

And to
وَعَلَى
மீது
those who are Jews
ٱلَّذِينَ هَادُوا۟
யூதர்கள்
We forbade
حَرَّمْنَا
தடை செய்தோம்
every
كُلَّ
எல்லாவற்றையும்
(animal) with claws
ذِى ظُفُرٍۖ
நகமுடையது
and of the cows
وَمِنَ ٱلْبَقَرِ
இன்னும் மாட்டில்
and the sheep
وَٱلْغَنَمِ
இன்னும் ஆட்டில்
We forbade
حَرَّمْنَا
தடைசெய்தோம்
to them
عَلَيْهِمْ
அவர்கள் மீது
their fat
شُحُومَهُمَآ
இரண்டின் கொழுப்புகளை
except
إِلَّا
தவிர
what carried
مَا حَمَلَتْ
எதை/சுமந்தன
their backs
ظُهُورُهُمَآ
அவை இரண்டின் முதுகுகள்
or
أَوِ
அல்லது
the entrails
ٱلْحَوَايَآ
சிறு குடல்கள்
or
أَوْ
அல்லது
what
مَا
எது
(is) joined
ٱخْتَلَطَ
கலந்துவிட்டது
with the bone
بِعَظْمٍۚ
எலும்புடன்
That
ذَٰلِكَ
அது
(is) their recompense
جَزَيْنَٰهُم
கூலி கொடுத்தோம்/அவர்களுக்கு
for their rebellion
بِبَغْيِهِمْۖ
அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால்
And indeed, We
وَإِنَّا
நிச்சயமாக நாம்
[surely] are truthful
لَصَٰدِقُونَ
உண்மையாளர்களே

Wa 'alal lazeena haadoo harramnaa kulla zee zufurinw wa minal baqari walghanami harramnaa 'alihim shuh oomahumaaa illaa maa hamalat zuhooruhumaaa awil hawaayaaa aw makhtalata bi'azm zaalika jazainaahum bibaghyihim wa innaa lasaa diqoon (al-ʾAnʿām 6:146)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நகத்தையுடைய பிராணிகள் (பிளவில்லாத குளம்புகளை உடைய ஒட்டகை, தீப்பறவை, வாத்து போன்ற) அனைத்தையும் (புசிக்கக் கூடாது என்று) யூதர்களுக்கு நாம் தடுத்திருந்தோம். அன்றி, ஆடு, மாடு ஆகியவற்றிலும், அவற்றின் முதுகிலோ அல்லது வயிற்றிலோ அல்லது எலும்புடன் கலந்தோ உள்ளவைகளைத் தவிர (மற்ற பாகங்களில் உள்ள) கொழுப்புக் களையும் நாம் அவர்களுக்கு விலக்கியே இருந்தோம். அவர்கள் (நமக்கு) மாறு செய்ததற்குத் தண்டனையாக இவ்வாறு (தடுத்துத்) தண்டித்து இருந்தோம். நிச்சயமாக நாம்தான் உண்மை கூறுகின்றோம். (இதற்கு மாறாகக் கூறும் யூதர்கள் பொய்யர்களே!)

English Sahih:

And to those who are Jews We prohibited every animal of uncloven hoof; and of the cattle and the sheep We prohibited to them their fat, except what adheres to their backs or the entrails or what is joined with bone. [By] that We repaid them for their transgression. And indeed, We are truthful. ([6] Al-An'am : 146)

1 Jan Trust Foundation

நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம்.