எவரேனும் ஒரு நன்மையைச் செய்தால் அவருக்கு அதைப்போல் பத்து பங்கு (நன்மை) உண்டு. எவரேனும் ஒரு தீமையைச் செய்தால் அதைப் போன்றதேயன்றி (அதிகமாக) அவருக்குக் கூலி கொடுக்கப்படமாட்டாது. (குற்றத்திற்கு அதிகமான தண்டனையைக் கொடுத்தோ அல்லது நன்மைக்குரிய கூலியைக் குறைத்தோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.
English Sahih:
Whoever comes [on the Day of Judgement] with a good deed will have ten times the like thereof [to his credit], and whoever comes with an evil deed will not be recompensed except the like thereof; and they will not be wronged. ([6] Al-An'am : 160)
1 Jan Trust Foundation
எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு; எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் - அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எவர் ஒரு நன்மையைச் செய்தாரோ அவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் உண்டு. எவர் ஒரு தீமையைச் செய்தாரோ அது போன்றே (அதன் அளவே) தவிர அவர் கூலி கொடுக்கப்படமாட்டார். (நன்மையைக் குறைத்தோ தீமையைக் கூட்டியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.