"நிச்சயமாக என்னுடைய இறைவன் எனக்கு நேரான பாதையை அறிவித்து விட்டான். (அது) மிக்க உறுதியான மார்க்கமாகும். அன்றி இப்ராஹீமுடைய நேரான மார்க்கமுமாகும். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவில்லை" என்று (நபியே!) நீங்கள் கூறுங்கள்.
English Sahih:
Say, "Indeed, my Lord has guided me to a straight path – a correct religion – the way of Abraham, inclining toward truth. And he was not among those who associated others with Allah." ([6] Al-An'am : 161)
1 Jan Trust Foundation
(நபியே!) நீர் கூறும்| “மெய்யாகவே என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பால் வழி காட்டினான் - அது மிக்க உறுதியான மார்க்கமாகும்; இப்ராஹீமின் நேர்மையான மார்க்கமுமாகும், அவர் இணைவைப்பவர்களில் ஒருவராக இருக்கவில்லை.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
“நிச்சயமாக என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினான். அது நிலையான மார்க்கமாகும், இப்ராஹீம் உடைய கொள்கையாகும். (அவர் மார்க்கத்தில்) உறுதியுடையவர். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை” என்று (நபியே!) கூறுவீராக.