قُلْ اَرَءَيْتَكُمْ اِنْ اَتٰىكُمْ عَذَابُ اللّٰهِ اَوْ اَتَتْكُمُ السَّاعَةُ اَغَيْرَ اللّٰهِ تَدْعُوْنَۚ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ( الأنعام: ٤٠ )
Qaul ara'aytakum in ataakum 'azaabul laahi aw atatkumus Saa'atu a-ghairal laahi tad'oona in kuntum saadiqeen (al-ʾAnʿām 6:40)
Abdul Hameed Baqavi:
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: உங்களுக்கு அல்லாஹ்வுடைய வேதனை வந்துவிட்டால் அல்லது உங்களுக்கு விசாரணைக்காலம் வந்து விட்டால் அல்லாஹ் அல்லாத (இ)வைகளையா நீங்கள் (உங்கள் உதவிக்கு) அழைப்பீர்கள்! என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? (இந்த சிலைகளை உங்கள் தெய்வங்கள் என்று கூறும்) நீங்கள் உண்மை சொல்பவர் களாயிருந்தால் (அவைகளையே உங்கள் உதவிக்கு அழையுங்கள்.)
English Sahih:
Say, "Have you considered: if there came to you the punishment of Allah or there came to you the Hour – is it other than Allah you would invoke, if you should be truthful?" ([6] Al-An'am : 40)
1 Jan Trust Foundation
(நபியே! அவர்களிடம்) நீர் கூறும்| “அல்லாஹ்வுடைய வேதனை உங்களிடம் வந்து விட்டால், அல்லது (நீங்கள் அஞ்சும்) அந்த (விசாரணைக்) காலம் வந்துவிட்டால் (அதிலிருந்து உங்களைக் காப்பாற்ற) அல்லாஹ்வையன்றி (வேறு யாரையாவது) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் - அழைப்பீர்களா?” என்பதை (நீங்கள் சிந்தித்துப்) பார்த்தீர்களா?