Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௫௨

وَلَا تَطْرُدِ الَّذِيْنَ يَدْعُوْنَ رَبَّهُمْ بِالْغَدٰوةِ وَالْعَشِيِّ يُرِيْدُوْنَ وَجْهَهٗ ۗمَا عَلَيْكَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَيْءٍ وَّمَا مِنْ حِسَابِكَ عَلَيْهِمْ مِّنْ شَيْءٍ فَتَطْرُدَهُمْ فَتَكُوْنَ مِنَ الظّٰلِمِيْنَ   ( الأنعام: ٥٢ )

And (do) not send away
وَلَا تَطْرُدِ
விரட்டாதீர்
those who
ٱلَّذِينَ
எவர்களை
call
يَدْعُونَ
பிரார்த்திப்பார்கள்
their Lord
رَبَّهُم
தங்கள் இறைவனை
in the morning
بِٱلْغَدَوٰةِ
காலையில்
and the evening
وَٱلْعَشِىِّ
இன்னும் மாலையில்
desiring
يُرِيدُونَ
நாடியவர்களாக
His Countenance
وَجْهَهُۥۖ
அவனின் முகத்தை
Not (is) on you
مَا عَلَيْكَ
உம் மீதில்லையே
of
مِنْ
இருந்து
their account
حِسَابِهِم
அவர்களுடைய கணக்கு
[of] anything
مِّن شَىْءٍ
எதுவும்
and not
وَمَا
இன்னும் இல்லை
from your account
مِنْ حِسَابِكَ
உம் கணக்கிலிருந்து
on them
عَلَيْهِم
அவர்கள் மீது
[of] anything
مِّن شَىْءٍ
எதுவும்
So were you to send them away
فَتَطْرُدَهُمْ
நீர் விரட்டுவதற்கு/அவர்களை
then you would be
فَتَكُونَ
ஆகிவிடுவீர்
of the wrongdoers
مِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்

Wa laa tatrudil lazeena yad'oona Rabbahum bilghadaati wal 'ashiyyi yureedoona Wajhahoo ma 'alaika min hisaabihim min shai'inw wa maa min hisaabika 'alaihim min shai'in fatatrudahum fatakoona minaz zaalimeen (al-ʾAnʿām 6:52)

Abdul Hameed Baqavi:

(நபியே!) தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தை விரும்பி காலையிலும் மாலையிலும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பவர்களை நீங்கள் விரட்டி விடாதீர்கள்! அவர்களுடைய கணக்கிலிருந்து எதுவும் உங்களுடைய பொறுப்பாகாது. உங்களுடைய கணக்கிலிருந்து எதுவும் அவர்களுடைய பொறுப்பாகாது. ஆகவே, நீங்கள் அவர்களை விரட்டினால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள்!

English Sahih:

And do not send away those who call upon their Lord morning and afternoon, seeking His face [i.e., favor]. Not upon you is anything of their account and not upon them is anything of your account. So were you to send them away, you would [then] be of the wrongdoers. ([6] Al-An'am : 52)

1 Jan Trust Foundation

(நபியே!) தங்கள் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடி, எவர் காலையிலும் மாலையிலும், அவனை(ப் பிரார்த்தித்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீர் விரட்டி விடாதீர்; அவர்களுடைய கேள்வி கணக்குப் பற்றி உம்மீது பொறுப்பில்லை, உம்முடைய கேள்வி கணக்குப் பற்றி அவர்கள் மீதும் யாதொரு பொறுப்புமில்லை - எனவே நீர் அவர்களை விரட்டி விட்டால், நீரும் அநியாயம் செய்பவர்களில் ஒருவராகி விடுவீர்.