(நபியே!) இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் "எங்களை விட்டு (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?" என்று (பணக்காரர்கள்) கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?
English Sahih:
And thus We have tried some of them through others that they [i.e., the disbelievers] might say, "Is it these whom Allah has favored among us?" Is not Allah most knowing of those who are grateful? ([6] Al-An'am : 53)
1 Jan Trust Foundation
நமக்கிடையில் (ஏழைகளாகிய) இவர்கள் மீதா அல்லாஹ் அருள்புரிந்து விட்டான்? என்று (செல்வந்தர்கள்) கூற வேண்டுமென்பதற்காக அவர்களில் சிலரை சிலரைக்கொண்டு நாம் இவ்வாறு சோதித்தோம். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனில்லையா?
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு சோதித்தோம், இறுதியில் "எங்களுக்கு மத்தியிலிருந்து இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?" என்று அவர்கள் கூறுவார்கள். நன்றியுள்ளவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?