(மேற்கூறப்பட்ட) இவை நம்முடைய உறுதிமிக்க ஆதாரங்களாகும். இப்ராஹீம் தன் மக்களைத் (தர்க்கத்தில்) வெல்வதற்காக, நாம் இவைகளை அவருக்குக் (கற்றுக்) கொடுத்தோம். நாம் விரும்பியவர்களின் பதவியை நாம் எவ்வளவோ உயர்த்தி விடுகின்றோம். (நபியே!) நிச்சயமாக உங்களுடைய இறைவன் மிக ஞானமுடையவனாகவும், மிகுந்த அறிவுடையவனாகவும் இருக்கின்றான்.
English Sahih:
And that was Our [conclusive] argument which We gave Abraham against his people. We raise by degrees whom We will. Indeed, your Lord is Wise and Knowing. ([6] Al-An'am : 83)
1 Jan Trust Foundation
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இவை நம் சான்றாகும். அவற்றை அவருடைய சமுதாயத்திற்கு எதிராக இப்றாஹீமுக்கு கொடுத்தோம். நாம் நாடியவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம்.(நபியே!) நிச்சயமாக உம் இறைவன் ஞானவான்,நன்கறிபவன்.