Skip to main content

ஸூரத்துல் அன்ஆம் வசனம் ௯௯

وَهُوَ الَّذِيْٓ اَنْزَلَ مِنَ السَّمَاۤءِ مَاۤءًۚ فَاَخْرَجْنَا بِهٖ نَبَاتَ كُلِّ شَيْءٍ فَاَخْرَجْنَا مِنْهُ خَضِرًا نُّخْرِجُ مِنْهُ حَبًّا مُّتَرَاكِبًاۚ وَمِنَ النَّخْلِ مِنْ طَلْعِهَا قِنْوَانٌ دَانِيَةٌ وَّجَنّٰتٍ مِّنْ اَعْنَابٍ وَّالزَّيْتُوْنَ وَالرُّمَّانَ مُشْتَبِهًا وَّغَيْرَ مُتَشَابِهٍۗ اُنْظُرُوْٓا اِلٰى ثَمَرِهٖٓ اِذَٓا اَثْمَرَ وَيَنْعِهٖ ۗاِنَّ فِيْ ذٰلِكُمْ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ   ( الأنعام: ٩٩ )

And He (is) the One Who
وَهُوَ ٱلَّذِىٓ
அவன்/எவன்
sends down
أَنزَلَ
இறக்கினான்
from
مِنَ
இருந்து
the sky
ٱلسَّمَآءِ
மேகம்
water
مَآءً
மழையை
then We bring forth
فَأَخْرَجْنَا
வெளியாக்கினோம்
with it
بِهِۦ
அதன் மூலம்
vegetation
نَبَاتَ
தாவரத்தை
(of) every thing
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
Then We bring forth
فَأَخْرَجْنَا
வெளியாக்கினோம்
from it
مِنْهُ
அதி லிருந்து
green plant
خَضِرًا
பசுமையானதை
We bring forth
نُّخْرِجُ
வெளியாக்குகிறோம்
from it
مِنْهُ
அதிலிருந்து
grain -
حَبًّا
வித்துக்களை
thick clustered
مُّتَرَاكِبًا
அடர்ந்தது
And from the date-palm
وَمِنَ ٱلنَّخْلِ
இன்னும் பேரீச்ச மரத்தில்
from
مِن
இருந்து
its spathe
طَلْعِهَا
அதன் பாளை
clusters of dates
قِنْوَانٌ
பழக்குலைகள்
hanging low
دَانِيَةٌ
நெருக்கமான
And gardens
وَجَنَّٰتٍ
இன்னும் தோட்டங்களை
of grapes
مِّنْ أَعْنَابٍ
திராட்சைகளின்
and the olives
وَٱلزَّيْتُونَ
இன்னும் ஜைதூதூனை
and the pomegranates
وَٱلرُّمَّانَ
இன்னும் மாதுளையை
resembling
مُشْتَبِهًا
ஒப்பானது
and not resembling
وَغَيْرَ مُتَشَٰبِهٍۗ
இன்னும் ஒப்பாகாதது
Look
ٱنظُرُوٓا۟
பாருங்கள்
at its fruit
إِلَىٰ ثَمَرِهِۦٓ
அதன் கனிகளை
when it bears fruit
إِذَآ أَثْمَرَ
அவை காய்க்கும்போது
and its ripening
وَيَنْعِهِۦٓۚ
இன்னும் அவை பழமாகுவதையும்
Indeed in that
إِنَّ فِى ذَٰلِكُمْ
நிச்சயமாக இதில்
(are) signs
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
for a people (who) believe
لِّقَوْمٍ يُؤْمِنُونَ
மக்களுக்கு/நம்பிக்கை கொள்கிறார்கள்

Wa Huwal lazeee anzala minas samaaa'i maaa'an fa akhrajnaa bihee nabaata kulli shai'in fa akhrajnaa minhu khadiran nukhriju minhu habbam mutaraakibanw wa minan nakhli min tal'ihaa qinwaanun daaniyatunw wa jannaatim min a'naabinw wazzaitoona warrummaana mushhtabihanw wa ghaira mutashaabih; unzurooo ilaa samariheee izaaa asmars wa yan'ih; inna fee zaalikum la Aayaatil liqawminy yu'minoon (al-ʾAnʿām 6:99)

Abdul Hameed Baqavi:

அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்கி வைக்கின்றான். அதைக் கொண்டே சகல வகைப் புற்பூண்டுகளையும் நாம் முளைக்க வைத்து, அதில் இருந்து பசுமையான தழைகளையும் நாம் வெளியாக்குகின்றோம். அதிலிருந்தே அடர்ந்த வித்துக்களை (யுடைய கதிர்களை)யும் நாம் வெளியாக்குகின்றோம். பேரீச்ச மரத்தின் பாளைகளில் வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன. (அவற்றையும் நாமே வெளியாக்குகின்றோம்.) திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்றுபோலும் (ரசனையில்) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜெய்த்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாமே வெளியாக்குகின்றோம்.) அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாகும் விதத்தையும் (மக்களே!) உற்று நோக்குங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

English Sahih:

And it is He who sends down rain from the sky, and We produce thereby the growth of all things. We produce from it greenery from which We produce grains arranged in layers. And from the palm trees – of its emerging fruit are clusters hanging low. And [We produce] gardens of grapevines and olives and pomegranates, similar yet varied. Look at [each of] its fruit when it yields and [at] its ripening. Indeed in that are signs for a people who believe. ([6] Al-An'am : 99)

1 Jan Trust Foundation

அவனே வானத்திலிருந்து மழையை இறக்கினான். அதைக் கொண்டு எல்லா வகையான புற்பூண்டுகளையும் நாம் வெளியாக்கினோம்; அதிலிருந்து பச்சை(த் தழை)களை வெளிப்படுத்துகிறோம்; அதிலிருந்து நாம் வித்துகளை அடர்த்தியான கதிர்களாக வெளிப்படுத்துகிறோம்; பேரீத்த மரத்தின் பாளையிலிருந்து வளைந்து தொங்கும் பழக்குலைகளும் இருக்கின்றன; திராட்சைத் தோட்டங்களையும், (பார்வைக்கு) ஒன்று போலவும் (சுவைக்கு) வெவ்வேறாகவும் உள்ள மாதுளை, ஜைத்தூன் (ஒலிவம்) ஆகியவற்றையும் (நாம் வெளிப்படுத்தியிருக்கிறோம்); அவை (பூத்துக்) காய்ப்பதையும், பின்னர் கனிந்து பழமாவதையும் நீங்கள் உற்று நோக்குவீர்களாக - ஈமான் கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் அத்தாட்சிகள் அமைந்துள்ளன.