(நபியே!) நீங்கள் அவர்களுக்குப் பிழைபொறுக்கத் தேடுவதும் அல்லது, அவர்களுக்குப் பிழை பொறுக்கத் தேடாதிருப்பதும் அவர்களுக்குச் சமமே. அல்லாஹ் அவர்களுக்குப் பிழை பொறுக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவம் செய்யும் இத்தகைய மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை.
English Sahih:
It is all the same for them whether you ask forgiveness for them or do not ask forgiveness for them; never will Allah forgive them. Indeed, Allah does not guide the defiantly disobedient people. ([63] Al-Munafiqun : 6)
1 Jan Trust Foundation
அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரினாலும் அல்லது பாவமன்னிப்புக் கோராவிட்டாலும் அவர்களுக்குச் சமமேயாகும்; அல்லாஹ் அவர்களுக்குப் பாவமன்னிப்பளிக்க மாட்டான் - பாவம் செய்யும் சமூகத்தாரை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
2 Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நீர் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடினாலும், அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமம்தான். அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.